சென்னை: மத்திய அரசின் FACT நிறுவனத்தில் டெக்னீசியன் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
கேரளா மாநிலம் உத்யோகமண்டல் பகுதியில் உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் என்பது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது டெக்னீசியன் (ப்ராசஸ்) பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி படிப்பை கெமிஸ்ட்ரி, இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி அல்லது டிப்ளமோவில் கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 5 வயது, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 3 வயது என அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 18 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆன்லைனில் www.fact.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் ‛DGM (HR), HR Department, FEDO Builing, FACT, Udyogamandal, PIN - 683 501' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தின் மேல் "Application for the post of Technician(Process) on FTB)'' என எழுதி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 2 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு 2 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here