நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்போது மும்பையில் வீடு வாங்கிக் கொண்டு சூர்யாவுடன் செட்டில் ஆகியுள்ளார் ஜோதிகா. இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
ஜோதிகா தலைகீழாக வொர்க்அவுட் வீடியோ : நடிகை ஜோதிகா தன்னுடைய உடல்நலத்தில் எப்போதுமே மிகுந்த அக்கறை கொண்டவர். 90களில் நடிக்க வந்தபோது எப்படி ஒரே மாதிரியான உடல்கட்டை மெயின்டெய்ன் செய்தாரோ, அதேபோன்று தற்போதும் சிக்கென்று, புதிய ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும்வகையில் தன்னுடைய உடலை மெயின்டெயின் செய்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில நாயகிகள், தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்துவதில்லை.
ஆனால் ஜோதிகா இதில் மற்ற நாயகிகளுக்கு முன்னுதாரணமாக காணப்படுகிறார். திருமணமாகி, குழந்தைகள் கவனிப்பில் அக்கறை செலுத்திவந்த ஜோதிகா, ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகள் வளர்ந்தவுடன், மீண்டும் நடிக்க வந்தார். அப்போதும் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்கு அவரது உடல்கட்டும் முக்கிய காரணமாக அமைந்தது.36 வயதினிலே படத்தில் வளர்ந்த பெண்ணிற்கு அம்மாவாக நடித்தாலும் சிக்கென்றுதான் காணப்பட்டார் ஜோதிகா.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இவை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. இதில் சில படங்களை தன்னுடய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக சூர்யா தயாரித்தார். இதனிடையே சமூக வலைதளங்களிலும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வொர்க் அவுட், வாக்கிங் போன்றவற்றை செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டாகும்.
அந்த வகையில் தற்போது தான் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஜோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அனைத்து வொர்க் அவுட்டிலும் தலைகீழாக தொங்கியபடி அவர் பயிற்சி செய்கிறார். தலைகீழாக தொங்கியபடி ஒற்றை கையில் தாங்கி நிற்கிறார், பந்தை பிடித்தபடி தலைகீழாக நிற்கிறார், தலைகீழாக தொங்கியபடி பந்தாடுகிறார். இவ்வாறு பல பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 44 வயதான நடிகை ஜோதிகா, இரண்டு குழந்தைகளுக்கும் தாயான நிலையில், தன்னுடைய பிட்னசில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது இந்த வெறித்தனமான வொர்க்அவுட் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது. குறிப்பாக தலைகீழாக தொங்கியபடி, படிக்கட்டில் நடந்து வருவது வேற லெவலில் உள்ளது. வீடியோ வெளியாகி 2 மணிநேரத்திலேயே 2.5 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.