மும்பை: 72 வயது நபரை திருமணம் செய்து கொள்ள போவதாக இளம் பெண் கூறியிருக்கிறார். இதைக்கேட்டதுமே மகிழ்ச்சியில் துள்ளிகுதித்துள்ளார் அந்த முதியவர்.. லிவ் இன் முறையில் வாழ்ந்த அந்த பெண், கடைசியில் என்ன செய்தார் தெரியுமா?
நவிமும்பை ராய்கட் பகுதியை சேர்ந்தவர் ராம்தாஸ் கெய்ரே.. இவருக்கு 72 வயதாகிறது.. மும்பை வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. 2 முறை ராம்ஸுக்கு திருமணமாகிவிட்டது.. 2 மனைவியுமே இறந்துவிட்டார்கள்.
பேங்க்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சொந்த ஊரிலேயே தனியாக வாழ்ந்து வந்தார்.. அப்போதுதான், கவிதா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.. தனிமையில் வாழ்ந்து வந்த ராம்தாஸுக்கு கவிதாவின் துணை ஆறுதலை தந்தது. அதனால், 3வதாக கவிதாவுடனேயே தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார்.
லிவ் இன் முறை: கடந்த வருடத்திலிருந்து, கவிதாவுடன் லிவ் இன் முறையில் வாழ ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களிலேயே, ராம்தாஸையே கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னார்.. இதை 72 வயதான ராம்தாஸ் எதிர்பார்க்கவேயில்லை.. ஆனந்தத்தில் துள்ளினார்..
உடனே கவிதாவுக்கு தங்க நகைகள், பணம் என அள்ளி அள்ளி கொடுத்தார்... ஆனால், அனைத்தையும் அவரிடமிருந்து வாரி சுருட்டிக்கொண்ட கவிதா, அங்கிருந்து கிளம்பி மும்பைக்கு வந்துவிட்டார். அத்துடன், அங்குஷ் என்ற நபரை கல்யாணமும் செய்து கொண்டார்.
கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஆசைகாட்டி மோசம் செய்ததை அறிந்து, ராம்தாஸ் உச்சக்கட்ட கோபம் அடைந்தார்.. அதனால் கவிதாவிடம் சென்று, தான் கொடுத்த தங்க நகைகள், பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.
கவிதா கணவர்: உடனே கவிதா, இதைப்பற்றி தன்னுடைய கணவரிடம் சொன்னார்.. பின்னர் 2 பேரும் சேர்ந்து ராம்தாஸை கொன்றுவிடுவதென முடிவு செய்தனர்.. அதன்படி இருவரும் ராம்தாஸ் ஊருக்கு சென்றார்கள்.. கவிதாவின் கணவர் அங்குஷ், அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கினார்.. ஆனால், ராம்தாஸை தனிமையில் சந்தித்த கவிதா, மீண்டும் அவரிடம் நட்பாக பேசதுவங்கினார். சம்பவத்தன்று ராம்தாஸ் வீட்டிற்கும் சென்று கவிதா தங்கினார்.
ராம்தாஸிற்கு கொடுத்த சாப்பாட்டில் மயக்க மருந்தும் கலந்து தந்தார்.. அதனை சாப்பிட்டுவிட்டு ராம்தாஸ் மயக்கம் அடைந்தவுடன் லாட்ஜில் தங்கியிருந்த தனது கணவனுக்கு போனை போட்டு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து மயங்கி கிடந்த ராம்தாஸ் தலையில் பெரிய ஆயுதத்தால் சரமாரியாக அடித்தனர்.. பிறகு அவரை கழுத்தையும் நெரித்து கொன்றுவிட்டு, தங்கள் ஊருக்கு திரும்பிவிட்டார்கள்.
ஸ்விட்ச் ஆப்: இதனிடையே ராம்தாஸ் மகன், தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்தபடியே இருந்துள்ளார்.. கடந்த சில நாட்களாகவே ராம்தாஸ் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், மகனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. எனவே, அதே ஊரிலுள்ள தன்னுடைய சொந்தக்காரருக்கு போன் செய்து, தன்னுடைய அப்பாவை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே உறவினர்கள் சென்று பார்த்தபோது, ராம்தாஸ் வீடு பூட்டி இருந்தது. இதனால், உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து கதவை உடைத்துக் கொண்டு பார்த்தபோதுதான், ராம்தாஸ் சடலமாகி கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அவரது தலையில், உடலில் பலத்த காயங்கள் கிடந்தன.. இதையடுத்து, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ததாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது..
ஜோடியாக கைது: இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டபோதுதான், ராம்தாஸுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண், சமீபத்தில் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கவிதாவை தீவிரமாக போலீசார் தேடி வந்தநிலையில், மும்பையில் தற்போது கைது செய்துள்ளனர்.. அவரிடம் விசாரணை நடத்தியதில், அங்குஷூம் சேர்ந்து இந்த கொலையை செய்தது உறுதியானது. இப்போது புதுமண ஜோடி, ஜெயிலில் உள்ளனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage