திருப்பத்தூர் தீபா.. தறிகெட்டு ஓடிய மனதால், தடம் மாறிய வாழ்வு.. எக்குதப்பாக சிக்கிய 2 ஆண் நண்பர்கள்

post-img
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இளம்பெண் மர்மச்சாவு வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி திருப்பத்தூரை கதிகலங்க செய்து வருகிறது. திருப்பத்தூர் அடுத்துள்ள சந்திரபுரம் அருகே உள்ளது ஒண்ணுவட்டம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த தம்பதி சிவா - தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தீபாவுக்கு 28 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தம்பதி: கட்டிட வேலை பார்ப்பவர் சிவா. அதனால் பெங்களூருவில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகிறார்... வேலைசூழல் காரணமாக, மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வாராம். இதனால் தீபா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 11ம்தேதி, ஏற்கனவே தீபா வாங்கியிருந்த கடன்தொகையை வசூலிப்பதற்காக, தீபா வீட்டுக்கு மகளிர் குழுவினர் வந்திருக்கிறார்கள். அப்போது கதவு திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே படுக்கையறையில் சடலமாக தீபா கிடப்பதை கணடு அலறியிருக்கிறார்கள்.. தீபாவின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்திருக்கின்றன. அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, தகலறிந்து வந்த போலீசார் தீபாவின் சடலத்தை மீட்டு, மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். நடத்தினர். பிறகு தீபாவின் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செல்போன் ஆய்வு: அவருடன் யார் யார் பேசினார்கள் என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட 2 நம்பர்களிலிருந்து மட்டும் அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரிந்தது. இதனால் அவர்கள் என்று ஆராய்ந்தததில், அதேபகுதியை சேர்ந்த குமரேசன் (26), விக்னேஷ் (25) ஆகிய இருவரும்தான், தீபாவுக்கு அடிக்கடி போன் செய்தவர்கள் என்பது உறுதியானது. இதனால், அவர்கள் 2பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போதுதான், பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. அதாவது, தீபாவுக்கும் குமரேசனுக்கும் கடந்த 7 வருடங்களாகவே தகாத உறவு இருந்து வந்துள்ளது. தீபாவின் கணவரும் வெளியூரில் இருப்பதால், அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். அப்போது விக்னேஷூடன் தீபாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்துள்ளனர். கள்ள உறவு: இப்படிப்பட்ட சூழலில், சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் சொந்த ஊர் திரும்பினார். அப்போதுதான், தீபா - விக்னேஷ் இடையே கள்ள உறவு இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.. தீபா மீது ஆத்திரம் கொண்டு, கடந்த 10ம்தேதி அவரது வீட்டுக்கு குமரேசன் சென்றார். அங்கு தீபாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால் தீபா மறுத்துள்ளார். அதற்கு குமரேசன், "விக்னேஷூடன் தொடர்பு இருப்பதால்தான், என்னை நீ தவிர்க்கிறாய் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.. இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, தீபாவை சரமாரி அடித்து தாக்கினார். இதனால் தீபா அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. அப்போது, தீபாவுடன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். தலைமறைவு: அவர் சென்றதுமே, சிறிது நேரம் கழித்து நள்ளிரவு விக்னேஷ் வந்துள்ளார். தீபாவுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் தனக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி தீபா மறுத்துள்ளார். உடனே ஆத்திரமடைந்த விக்னேஷ், தீபாவை சரமாரி தாக்கிவிட்டு, உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மூச்சுத்திணறி தீபா இறந்துவிட்டார்.. பிறகு, குமரேசன், விக்னேஷ் இருவருமே தலைமறைவாகிவிட்டார்களாம். இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, குமரேசன், விக்னேஷ் ஆகியோரை தீவிரமாக வலைவீசி தேடினார்கள். இறுதியில், நேற்று இவர்களை போலீசார் கைது செய்து, கொலை வழக்கு செய்து செய்தனர். தற்போது இருவருமே வேலூர் ஜெயிலில் உள்ளதால், தீபா கொலை தொடர்பாக இவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Related Post