அண்ணாமலை VS சீமான்.. இதில் பங்கமாய் கலாய்த்தது யாரு..

post-img

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட போவதாக சீமான் பேசிய நிலையில் அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் பதிலடி கொடுத்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பதை பார்ப்போம்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "சீமான் எங்கு வேண்டும் என்றாலும் போட்டியிடட்டும், அவரு எங்க போட்டியிட்டாலும் தோற்கத்தான் போறாரு.. அவருக்கு வாய் இருக்கு பேசுறாரு.. எந்த ஊருக்கு போகனும்னு வழி தெரிஞ்சா கஷ்டம்... எந்த ஊருக்கு போகனும்னு தெரியாதவன் எங்க வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா?


சீமான் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரை பல இடங்களில் நான் உயர்வாக பேசி உள்ளேன்.. மோடி எங்கு போட்டியிடுகிறாரோ அங்கு போய் போட்டியிடட்டும். வாரணாசியோ அல்லது வதோதராவோ போய் போட்டியிடட்டுமே.. ஜெயிக்க மாட்டோம்னு தெரிஞ்சு போச்சு.. ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் என்ன. சென்னையில் போட்டியிட்டால் என்ன.. சீமான் மீது கவுரம் வைத்திருக்கும் மனிதன் நான். அதையும் அவர்கள் புரிந்து பேச வேண்டும்.


மோடி வாரணாசியில் போட்டியிட்ட உடன் அந்த தொகுதியே அடிப்படையில் இருந்து மாறிவிட்டது. ராமநாதபுரத்தை பொறுத்தவரை மோடி ஐயா வந்தால் தான் எங்க பிரச்சனை தீரும் என்று அந்த மக்கள் கூறுகிறார்கள். சீமான் அவர்கள் ராமநாதபுரத்தை பொறுத்தவரை ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.



இந்தியாவின் மோசமான 112 மாவட்டங்களில் ஒன்றாக ராமநாதபுரம் இருக்கிறது. விருதுநகரும் அந்த லிஸ்டில் இருக்கிறது. பிரதமர் மோடி வந்தால் தங்கள் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு போகும் என்று நம்பி ராமநாதபுரம் மக்கள் கேட்கிறார்கள்., ஆகவே மக்கள் விருப்பம் இப்படி இருக்கிறது. மோடி அவர்கள் எங்கு நின்றாலும் ஜெயிக்க போகிறார். அவர் வந்தால் செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. மக்களும் அவர் உள்ளூர்காரரா, வெளியூர்காரரா என்று பார்க்க மாட்டார்கள்.


சீமான் அவர்கள் புரிந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் இத்தனை ஊழல் வாதிகள் திமுகவில் இருக்கிறார்களே, அவர்களை எதிர்த்து போட்டியிடலாமே.. உண்மையாலுமே சீமான் ஊழலை எதிர்க்கிறார் என்றால், தயாநிதிமாறனை எதிர்த்து போட்டியிடலாமே, டிஆர் பாலுவை எதிர்த்து போட்டியிடலாமே.. சீமான் இவர்களை எதிர்த்து போட்டியிட வேண்டுமே தவிர, நல்லது செய்யும் மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று நினைக்கக்கூடாது." இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


இதற்கு பதிலடி கொடுத்த சீமான், நான் எங்கு நின்றாலும் தோற்றுப்போவேன்.. பாஜக தமிழ்நாட்டில் ஜெயித்திடுமா.. தம்பி அண்ணாமலை எங்கு நின்றாலும் ஜெயிச்சிடுவாரா.. நான் சிங்கம் மாதிரி தனியாக நிற்பேன்..நீங்க அப்படி தனியா நிற்பீங்களா.. 10 ஆண்டுகள் நாட்டை ஆண்டுவிட்டீர்கள் அல்லவா.. பெரிய கட்சி என்கிறீர்களே.. வாங்க தனியாக தமிழ்நாட்டில் நிற்கலாம்.. என்னை விட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்டுங்க.. நான் வாங்குற ஓட்டைவிட ஒரு விழுக்காடு அதிகம் வாங்கி காட்டுங்க பார்க்கலாம்.


எதுக்கு வெட்டி பேச்சு? நடையா நடந்து கடைசியில் எங்கய்யா எடப்பாடி பழனிசாமி வீட்டுல தான் நிற்பீங்க.. அவருடைய முதுகுக்கு பின்னாடி தான் போய் நிற்க போறீங்க.. நான் 40 இடத்திலும் போட்டி போடுவேன்.. நீங்க எத்தனை இடத்துல போட்டி போடுவீங்க.. வேட்பாளர் வச்சிருக்கீங்களா.. அதிபட்சம் போனால் 7 அல்லது 8 இடத்தில் போட்டியிடுவீங்க.. அதையும் எடப்பாடி கிட்ட ஏழு எட்டு தடவை நடையா நடந்து கெஞ்சி வாங்கனும்.. அவரு கொடுப்பாரா அப்படீன்றதையே யோசிக்கணும்... பிஜேபிக்கு எடப்பாடி ஒதுக்குற சீட் எல்லாம் வேஸ்ட் தானே.. எடப்பாடிக்கு தெரியும்ல.. அது அவருக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.. " இவ்வாறு சீமான் பேசினார்.

 

 

Related Post