பிக் பாஸ் சவுந்தர்யாவிற்கு நடந்த அதே சம்பவம்.. அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட்.. அரசு தந்த எச்சரிக்கை

post-img
சென்னை: இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்து உள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குடிமக்களை மோசடியில் இருந்து பாதுகாக்க முடியும் என்று எச்சரித்து உள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதும், ஆன்லைன் மோசடிகளில் இருந்து விலகி இருப்பதும் அவசியம். சாத்தியமான மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து விலகி இருப்பது.. பாதுகாப்பாக இருப்பது அவசியம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் குறித்து எச்சரித்து உள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் சவுந்தர்யா சமீபத்தில் 17 லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகவும்.. ஒரு கும்பல் தனது பணத்தை மோசடி செய்து பறித்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. போலீசாரிடம் பதியப்பட்ட எப் ஐ ஆர் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. சவுந்தர்யா சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது இந்த முறைகேடு நடந்து உள்ளது. அப்போது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. மும்பையில் இருந்து ஈரானுக்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம். சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளோம். விசாரணை செய்து வருகிறோம். நான் ராகேஷ் சர்மா. உங்களுக்கு ஸ்கைப் கால் செய்கிறேன் என்று கூறி போன் செய்துள்ளார். அதன்பின் அந்த போன் காலிலேயே உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளேன். உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதால் நீங்கள் எதுவும் செய்ய கூடாது. நீங்கள் யாரிடமும் பேச கூடாது. உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. நீங்கள் எத்தனை நாட்களாக போதை பொருள் கடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதை அடுத்து சிபிஐ தொடர்பான ஆவணங்கள், ஆர்பிஐ தொடர்பான ஆவணங்களை அனுப்பி உள்ளார். அதில் சவுந்தர்யா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து பயந்த சவுந்தர்யா அந்த நபருக்கு பணம் அனுப்பி உள்ளார்.மொத்தமாக 12 பணபரிவர்த்தனைகள் மூலம் பணம் அனுப்பி உள்ளார். வழக்கு நடத்த, ஜாமீன் வழங்க, விசாரணையை சென்னைக்கு மாற்ற என்று பல காரணங்களுக்காக பணம் அனுப்பி உள்ளார். மொத்தமாக இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 17 லட்சம் அனுப்பி உள்ளார். இப்படித்தான் அவர் பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில், FedEx, DHL, BlueDart, DTDC போன்ற கூரியர் நிறுவனங்களின் பெயரில் நடந்த இந்த மோசடிகளில் பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில், மோசடி செய்பவர்கள் குறிவைக்கப்பட்ட நபர்களை போனில் அழைத்து, உங்கள் பெயரில் ஒரு கூரியர் வந்துள்ளது. அந்த கூரியர் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக கூறி மிரட்டுவதை வழக்கமாய் வைத்துள்ளனர்.. உதாரணமாக சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம் என்று மிரட்டுவார்கள். அதன்பின் வழக்கு நடத்த.. ஜாமீன் வழங்க, விசாரணையை அவர்களின் ஊருக்கு மாற்ற என்று பல காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்து பல லட்சம் பணத்தை ஏமாற்றுவார்கள். இது போன்ற கால்கள் வந்தால் நம்ப கூடாது.. அதை நம்ப ஏமாற கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Related Post