விஜய்யின் 68வது படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர்!? லேட்டஸ்ட் தகவல்!

post-img

நடிகர் விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்குவது உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில்  தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தை ஆர்.பி சவுத்ரி தயாரிக்க உள்ளார். மேலும் அந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்குவார் என கூறப்படுகிறது.

                                                                                Vijay (@actorvijay) / Twitter

மேலும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும், அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன. விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகிறது.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய திரைப்படத்தை புத்தாண்டு பண்டிகைக்கு வெளியிடுகின்றனர்.  மேலும் அடுத்த ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு இரண்டு ட்ரீட் இருக்கலாம் என சினிமா துறையில் கூறுகின்றனர்.

Related Post