``ஜூலையில் DMK Files part 2 வெளியாகும்; பி.டி.ஆர்-ஐ மாற்றியது ஏன்?!" - அண்ணாமலை

post-img

தமிழக பா.ஜ,க தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,"அமைச்சரவை மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவடி நாசரை நீக்கிவிட்டு, டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவைக்கு கொண்டுவந்திருக்கிறார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பால் விலையை குறைப்போம் எனக் கூறியிருந்தார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 முறை பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

ஆரஞ் பால் பாக்கெட் விலையை ரூ.12 உயர்த்தியிருக்கிறார்கள். பால் விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி உயர்வுதான் காரணம் எனத் தெரிவித்திருந்தார் ஆவடி நாசர்.

இந்த நிலையில், ஆவடி நாசரை விடுவித்ததற்கு, முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அமைச்சராவது தேர்தல் அறிக்கையில் கூறியதுப் போல, பால் விலையை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அமைச்சர்களை நியமிப்பதற்கு தி.மு.க-வுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிறது எனத் தெரியவில்லை.

எந்தக் குடும்பம் தமிழ்நாட்டில் அதிக தொழில்களை மேற்கொண்டு வருகிறதோ, அவர்களுக்குதான் தொழிற்துறை அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நிலைப்பாடு இருந்தால், தற்போது பதவியேற்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா அதற்குப் பொருத்தமானவர். டி.ஆர்.பி.ராஜா, அவரின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் நிறுவனங்கள் மட்டும் 20-க்கு மேல் இருக்கிறது. எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள். எனவே, இந்தத் துறையில் டி.ஆர்.பி.ராஜா திறம்பட செயலாற்ற முடியுமா? எனப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் மதுவால் மரணங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் அரசு, மதுவை உற்பத்தி செய்வதில் தொடங்கி அதை விற்பது வரை அனைத்தையும் செய்கிறது. என் மீது இன்று டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். அவரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி மைத்ரேயன், டி.ஆர்.பாலு-விடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அதில் காவேரி படுகையில் இருக்கும் ஒ.என்.ஜி.சி, கெய்ன் இரண்டு நிறுவனங்களின் காஸ்-ஸை டி.ஆர். பாலு தன்னுடையச் சொந்த நிறுவனத்துக்கு, குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என நிர்பந்தித்திருக்கிறார் என்றார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
 
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

இதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு 'நிறுவனம் மூடப்படாமல் இருப்பதற்காக ஊழியர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டேன்' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த டி.ஆர் பாலு தான் என்மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

Related Post