கன்னட சினிமாவின் முன்னணி நடிகருக்கு 4வது ஸ்டேஜ் புற்றுநோய்! சக நடிகர் வெளியிட்ட ஷாக் தகவல்

post-img

பெங்களூர்: கன்னட திரையுலகின் மிக முன்னணியில் உள்ள ஒரு நடிகர்.. சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ள ஒரு நடிகர் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.. தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், சமீபத்தில் அவரது முகம் நன்கு பரிட்சையமானதுதான்.. அப்படியான நடிகரின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த நடிகருக்கு கடுமையான புற்றுநோய் இருப்பதாகவும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் அவர், சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைத்துவிட்டதாகவும் கூட செய்திகள் பரவுகின்றன. ஆனால் அவர் அப்படி சொத்துக்களை எழுதி வைக்கவில்லை என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும்.
அதேநேரம், அந்த நடிகரின் நோய் என்ன என்பது குறித்து இன்னும் வெளிப்படைத்தன்மை இல்லாமல்தான் உள்ளது. இப்படியாக ரசிகர்கள் கடும் டென்ஷனில் இருக்கும்போது, கன்னட திரையுலகின் ஒரு நடிகரே, நாம் மேலே குறிப்பிட்ட அந்த நடிகரின் ஹெல்த் குறித்து மறைமுகமாக தெரிவித்துள்ளது, ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளது, வேறுயாருமில்லை, கன்னட பிக்பாஸ் டைட்டில் வின்னரான, பிரதம் என்பவர்தான். இதுகுறித்து பிரதம் கூறியதை பாருங்கள்.. ஒரு மிகவும் பிரபலமான நடிகர். அவருக்கு புற்றுநோய் 4வது ஸ்டேஜிலுள்ளது. அந்த நடிகர் எல்லாருக்கும் பிடித்தவர். நான் அவரை சந்தித்தபோது, அவர் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை என்று என்னிடம் கூறினார். எனவே, நான் அவரது விருப்பத்தை மதித்து, அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரதம் கூறிய இந்த தகவல் சிலரால் பாராட்டப்பட்டாலும், பலரும் இது வெறும் பரபரப்பு பேட்டி என்றும், பிரதம் ஏன் அந்த நடிகரின் பெயரை வெளியிட மறுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், "நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பிரதம் அல்லது அந்த நடிகர் தாங்களாகவே முன்வந்து இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
தமிழ் சின்னத்திரை நடிகர் நேத்ரன் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், சமீபத்தில் உயிரிழந்தார். இது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விஷயத்தை இவ்வளவு நாளும், ரகசியமாக வைத்துக்கொண்டு, தைரியத்துடன் போராடி வந்துள்ளார் நேத்ரன். அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த விஷயத்தை அறிந்திருந்தனர். தற்போது அவரது மறைவுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே கன்னட திரையுலகிலும் இப்படி ஒரு மோசமான, தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரதம் கூறிய அந்த நடிகர் யார் என்பதை கன்னட ரசிகர்கள் பலரும் யூகித்துள்ளனர். ஆனால், அந்த நடிகருக்கு இந்த நோய் கண்டிப்பாக இருக்காது என்று அவர்கள் நம்புகிறார்கள். பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். சினிமா, பாரம்பரியம் கொண்ட அந்த குடும்பம் கன்னட திரையுலகின் ஆணிவேராக தாங்க வேண்டுமே தவிர இதுபோன்ற தகவல்கள் உண்மையாக இருக்கக் கூடாது என்பது அவர்களது ஆசையாகும்.

Related Post