நாடு முழுக்க 1 கோடிக்கும்.. மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி..

post-img

சென்னை: நாடு முழுக்க 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக.. 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி 8வது ஊதியக் குழு தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று செவ்வாய்க்கிழமை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட 8வது ஊதியக் குழுவின் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, நிதி அமைச்சகம் சார்பாக இந்த விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது குறித்து தற்போது அரசு பரிசீலனையில் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை அமைப்பது தொடர்பான திட்டம் எதுவும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டிலும் இல்லை: முன்னதாக 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளது..

7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025ல் அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.
ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த கமிஷன் தொடர்பான அறிவிப்பு எதையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை. 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான எந்த விதமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது குறித்து தற்போது அரசு பரிசீலனையில் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

ராஜ்யசபா எம்.பி.க்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார், வரவிருக்கும் பட்ஜெட்டின் போது 8 வது ஊதியக் குழுவின் அரசியலமைப்பை அறிவிக்க அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்று கேட்டனர். அப்படி திட்டம் எதுவும் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த வருடம் முழுக்க 8வது ஊதியக்குழு அமலுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post