கோலாலம்பூர்: மலேசியாவில் 80 கிலோ எடை கொண்ட பாம்பு ஒன்று திடீரென வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு சோஃபாவில் விழுந்தது. சோஃபாவில் படுத்த நெளிந்து கொண்டிருந்த பாம்பை கண்டு அதிர்ந்து போன வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஒடியதோடு மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பு என்று சொன்னாலே உடல் நடுங்கும் அளவுக்கு பாம்பு மீது ஒரு நடுக்கம் பெரும்பாலானவரிடம் இருக்கும். சில அடி பாம்பைக் கண்டாலே இப்படி என்றால், 80 கிலோ எடை கோண்ட பிரமாண்ட பாம்பு என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.. அப்படியே உடல் ஒரு புல்லரித்துவிடக் கூடும்.
அதிலும் வீட்டிற்குள் அனைவரும் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இப்படி அழையா விருந்தாளியாக பாம்பு எதுவும் நுழைந்தால் என்ன ஆகும்? என நினைத்து பாருங்கள்... "அம்மாடியோவ்.. என ஷாக் ஆகிவிடுவீங்க அப்படித்தானே.." அப்படியான ஒரு சம்பவம் தான் மலேசியாவில் நடைபெற்றுள்ளது. வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக 5 அடி நீளம் கொண்ட 80 கிலோ எடை கொண்ட பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மலேசியாவில் உள்ள கமுண்டிங், கம்புங் டேவ் என்ற பகுதியில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அனைவரும் இருக்கும் பொது திடீரென்று மேற்கூரையை பிய்த்துக்கொண்டு எதோ கருப்பாக ஒரு உருவம் நெளிந்துள்ளது. இதைப்பார்த்ததும் பயந்து போன குடும்பத்தினர் கிட்ட போய் பார்த்தனர். அப்போது தான் அவர்களுக்கு தெரிந்தது அது.. பெரிய பாம்பு என்பது..
உடனே அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவினர் மலைப்பாம்பை பிடிக்க முற்பட்டனர். சிறிது நேரம் போக்கு காட்டிய மலைப்பாம்பு, ஒரு வழியாக மீட்பு குழுவினரிடம் சிக்கியது. இதுவரை 80 கிலோ எடை கொண்ட இந்த மாதிரியான மலைப்பாம்பு பிடிபடுவது இதுவே முதல்முறை என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
சில நிமிட போராட்டத்திற்கு பிறகு பாம்பு சிக்கியதால் நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த வீட்டில் உள்ளவர்கள் வீட்டிற்குள் வந்தனர். ஒரு நிமிடம் அப்படியே தலை சுற்றிவிட்டது என்று கூறியுள்ளனர். மலைப்பாம்பை மீட்பு குழுவினர் பிடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை இந்த வீடியோவிற்கு பதிவிட்டு வருகிறார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage