ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் எஸ் ஓ, மதுபோதையில் காரை ஓட்டி வாகனங்களை இடித்துச்சென்றதாக கூறி சிலர் நடுரோட்டில் அவரை மடக்கி பிடித்து சிறைபிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி திருக்கோயில் புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாகும். . இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கருதப்படுகிறது.
இங்கு தான் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமன் வழிபட்டார் என்று மக்களால் நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் வந்து செல்வார்கள். இதுதவிர வட மாநிலத்தவர் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கிறார். வடமாநிலத்தில் காசி போல் தென்மாநிலத்தில் ராமேஸ்வரம் இருப்பதால் பலரும் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் எஸ் ஓ, மதுபோதையில் காரை ஓட்டி வாகனங்களை இடித்துச்சென்றதாக கூறி சிலர் திட்டக்குடி பகுதியில் நடுரோட்டில் அவரை மடக்கி பிடித்து சிறைபிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசி பிரியாணி தாங்க.. மது போதையில் மாம்பலம் போலீஸ்காரர்கள் செஞ்ச வேலை.. வீடியோவால் வில்லங்கம்
ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்ற ராமநாதசாமி கோயில் எஸ்.ஓ காரில் சென்றுள்ளாராம். அப்போது எதிரே வந்த வாகனங்களை மதுபோதையில் இடித்து தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த பொதுமக்கள், திட்டக்குடியில் அவரை மடக்கிப் பிடித்து சிறைபிடித்து வைத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மது போதையில் ராமநாதசாமி கோயில் எஸ் ஓ இருந்தாரா என்ன நடந்தது என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும். இந்த சம்பவத்தால் திட்டக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
Weather Data Source: Wettervorhersage 21 tage