சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றவர் 3 நாட்களாக அங்கே தான் இருந்து வருகிறார்.
இன்று இரவு அல்லது நாளை அவர் சென்னை திரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்த டெல்லி பயணத்தில், பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை அதிகாரிகள் என உயரதிகாரிகள் பலரையும் சந்தித்து விவாதித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
தமிழக அரசுக்கு எதிராகத்தான் ஆலோசனை நடத்தியிருப்பார் ; வேறு என்ன நடத்தியிருக்க முடியும்? என்று சோர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்தான் தேசிய பாதுகாப்பு அறிவுரை கழக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் போது தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்தின் உறுப்பினர்களுடன் ராஜ்பவனில் சீரியஸ் டிஸ்கஸ் நடத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கூட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் சமீப மாதங்களில் நடந்துள்ள சில சட்டம் ஒழுங்குக்கு எதிரான விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சில கொலைகள், தாக்குதல்கள் பற்றியெல்லாம் இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து கிடைத்த பல தகவல்களின் அடிப்படையிலும் இந்த ஆலோசனை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சட்ட ஒழுங்கு பற்றி ஆலோசனை: சமீப நாட்களாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட இதை பற்றி கடுமையான புகார்களை வைத்து இருந்தார். சமீபத்தில் கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்தில், இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.
விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்.. என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார்.