இன்று சந்திரன்.. நாளை சூரியன்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ தலைவர்!

post-img

நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கு இஸ்ரோ தயாராகி விட்டதாக, அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த பிறகு, இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திரயானின் வெற்றி எதிர்வரும் பொற் காலத்திற்கான தொடக்கம் என்று கூறினார். சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கலம் இறுதி கட்டத்தை எட்டியதாக அவர் தெரிவித்தார்.

இதே போன்று மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டமும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும் என்று சோமநாத் கூறினார்.

வானிலையை கணிப்பதற்கான ஜி.எஸ்.எல்.வி , பி.எஸ்.எல்.வி, மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. டி-3 என அடுத்த 3 மாதங்களுக்கான பணிகளை இஸ்ரோ தலைவர் அறிவித்தார்.

Related Post