“நிலாவை தொட்டுட்டேன்.. இந்தியாவும்!” சந்திரயான் 3 அனுப்பிய மெசேஜ்!

post-img

நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. எந்த நாடுகளின் விண்கலமும் செல்லாத நிலவின் தெற்கு பகுதியில் நிலை நிறுத்தும் வகையில் இஸ்ரோ இதை அனுப்பியது.

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் அது 5 முறை சுற்றி வந்தது. அதன் பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் அது நுழைந்தது. பல நாட்களாக அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்து உள்ளது.

விக்ரம் லேண்டர் நிலாவை தொட்ட உடனே இஸ்ரோவுக்கு சந்திரயான் 3 ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் இஸ்ரோ வெளியிட்டு உள்ள பதிவில், "இந்தியா.. நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். நீங்களும்தான். வெற்றிகரமாக சந்திரயான் 3 நிலாவில் தரையிறங்கி உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக இந்தியா நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையை பெற்று உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்று இருக்கிறது.

இதற்கு முன்பாக நிலவில் விண்கலத்தை அனுப்பிய நாடுகள் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகியவை மட்டுமே. இந்த வரிசையில் 4 வது நாடாக இடம்பிடித்து உள்ளது இந்தியா. 3 வளர்ந்த நாடுகளின் வரிசையில் ஒரு வளரும் நாடான இந்தியா இடம்பிடித்து இருப்பது உலக நாடுகளை புருவம் உயர்த்த வைத்து உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலத்தை நிலவை நோக்கி அனுப்பினர். ஆனால், அது தோல்வி அடைந்தது. மனம் தளராத விஞ்ஞானிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தினர். ஆனால் ரோவர் கருவி தரையிறங்கும்போது நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதியதி வெடித்து சிதறிது. இந்த நிலையில் தற்போது சந்திராயன் 3 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தி இஸ்ரோ சாதித்து உள்ளது.


Related Post