இரவு பிரியாணிக்கடையை மூடியதும்! அண்ணா பல்கலையில் தினமும் சீண்டல்! ஞானசேகரன் போனை பார்த்த போலீஸ் ஷாக்

post-img
சென்னை: அண்ணா பல்கலையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் போனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை போலீசார் அளித்த விளக்கத்தில், அண்ணா பல்கலையில், 2ம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் பெண் மாணவி பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். 24.12.2024 அன்று அவர் எழுத்துப்பூர்வ புகாரை அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. 23.12.2024 அன்று இரவு 7.45 மணிக்கு தன் காதலனுடன் இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழக நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம், ஒரு ஆண் தன் காதலனையும் தன்னையும் திடீரெனத் தாக்கியதாகக் குறிப்பிட்டு உள்ளார். இதனால் பயந்து போன காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த நபர் அந்த மாணவியை தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியபோதும், அவருடன் "வேறு வழியாக" உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புக் குழுவால் அவரது குறைகள் விசாரிக்கப்பட்ட நிலையில்.. போலீஸ் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.. இதனால், மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் http://Cr.No.3/2024 u/s 63(a), 64(i), 75(I)(ii)(iii) என்ற முகவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான் ஞானசேகரன் போனில் பெண்கள் பலரை துன்புறுத்தும் வீடியோக்கள் , உடலுறவு வீடியோக்கள் இருந்துள்ளன. பெண்களை மிரட்டி.. முக்கியமாக இரவு நேரத்தில் பிரியாணிக்கடையை மூடிவிட்டு செல்லும் நேரத்தில் மிரட்டி இது போல செய்யும் வழக்கத்தை அவர் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதன் வீடியோ காட்சிகள் அதில் இருந்துள்ளன. கொடூரன்: முன்னதாக அண்ணா பல்கலை பலாத்காரத்தில் கைது செய்யப்பட்ட பிரியாணிக்கடைக்காரர் ஞானசேகரன் குறித்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகார் சம்மந்தமாக. கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அண்ணா பல்கலைக்கழக பலாத்காரம்: அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ISவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் εδίστησεις நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post