கிணற்றில் குதித்த மனைவியைக் காப்பாற்றி பின்னர் கொலை செய்த கணவர்

post-img

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்து. அங்குள்ள ரவ்னி கிராமத்தைச் சேர்ந்த நபர் சங்கர் ராம். இவரது மனைவி ஆஷா பாய். தீவிர மது போதைக்கு அடிமையானவர் சங்கர் ராம். சம்பவ தினமான ஏப்ரல் 17ஆம் தேதி அன்று இரவு சங்கர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

 

பின்னர், தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என மனைவியை சங்கர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மனைவி ஆஷா சம்மதிக்கவில்லை. ஆனால், கணவர் சங்கர் கட்டாயமாக வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். எனவே, அதில் இருந்து தப்பிக்க வீட்டருகே இருந்த கிணற்றில் குதித்து விழுந்துள்ளார். உடனடியாக, கணவர் சங்கரும் மனைவியை காப்பாற்ற குதித்து, நீரில் இருந்து மீட்டுள்ளார்.

மனைவி ஆஷா, கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட பின்னரும் தம்பதி இருவர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் கணவர் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். பெண்ணின் பிறப்புறுப்பில் மோசமாக தாக்கி அடித்தே கொலை செய்துள்ளார்.

 

 

நள்ளிரவில் நடந்த இந்த சண்டையில் ஆஷா பாய் கொல்லப்பட்ட நிலையில், காவல்துறை தகவல் அறிந்து சங்கர் வீட்டிற்கு விரைந்துவந்து அவரை கைது செய்தது. மேலும், உயிரிழந்த ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. அதனைத்தொடர்ந்து சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Post