சென்னை: சமீப காலமாகவே குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள், பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. அந்தவகையில், இந்த வருடமும் ஏராளமான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றிருக்கின்றன. இதில் சில விவாகரத்து வழக்குகள் இணையத்திலும் வைரலாகியிருந்தது. அதில் ஒருசிலவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.
தைவானை சேர்ந்தவர்கள் அந்த இளம் தம்பதியினர்.. கடந்த 2014ல் திருமணம் நடந்து 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. 2 வருடத்தில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடித்ததால், தம்பதிக்குள் உறவுகொள்ளும் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது...
மன உளைச்சல்: அதேசமயம், கணவருடன் சேர்ந்தும் வாழாமல், அவரை பிரிந்தும் செல்லாமல், அவருக்கு மன உளைச்சலை மனைவி தந்து வந்துள்ளார். இதனால் கணவன் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றார். உடனே மனைவி நீதிபதியிடம், தன்னை திருத்தி கொள்வதாக கூறி மன்னிப்பு கேட்டு, கணவனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார்.
ஆனால், 2021ம் ஆண்டிற்கு பிறகு, கணவருடன் உடலுறவு கொள்வதற்கு காசு வாங்கினாராம்.. ஒவ்வொரு முறையும் உறவு கொள்வதற்கும், தன்னிடம் பேசுவதற்கும், ஒவ்வொருமுறையும் $15 அதாவது ரூ.1200 பணம் வாங்கியிருக்கிறார்.. நாளடைவில் பேச்சை குறைத்து மெசேஜ் மூலம் மட்டுமே கணவரிடம் பேசியிருக்கிறார். இதனால் நொந்துபோன கணவர், மறுபடியும் கோர்ட்டுக்கு ஓடினார்..
விவாகரத்து வழக்கு: இதையெல்லாம் கேட்ட நீதிபதி அதிர்ந்துபோய், இந்த உறவை சரிசெய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்று சொல்லி கணவர் கேட்ட விவாகரத்தையும் வழங்கி உத்தரவிட்டார்.. ஆனால், மனைவி இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். அங்கேயும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது... எனினும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல், இப்போது இன்னொரு கோர்ட்டுக்கு சென்றுள்ளார் தாய்வானில் கடந்த 2014-ம் ஆண்டும் இப்படித்தான், ஒரு பெண் தனது கணவரிடம் உறவுக்கு 60 டாலர் வசூலித்து வந்தாராம்..
நம்முடைய நாட்டில் பஞ்சாபில் 2 மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. தன்னுடைய மனைவி ஆபாசப் படங்களுக்கு அடிமையாகி, தினமும் ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும் என்று டார்ச்சர் செய்வதாகவும், அதிக நேரம் உடலுறவு கொள்ள முடியாமல் போனால் அதற்காகக் கேலி செய்ததாகவும், எனவே, மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கேட்டுள்ளார் அந்த கணவர்.
ஆபாச படம்: தான் ஆபாசப் படத்திற்கு அடிமையான சொல்லப்பட்டுள்ள புகாருக்கு எந்தவொரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று பெண் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இறுதியில், இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், "இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருவதால், விவாகரத்து அளிக்கப்பட்டது.
கர்நாடகாவில் 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. விஜயநகராவின் ஹொஸ்பேட்டை சேர்ந்த ராஜா உசேன் என்பவர் தன்னுடைய மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக குடும்ப வன்முறை வழக்கு பதிவானது...
பொய்யான புகார்: இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடந்தபோது, கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "என் மனுதாரர் மீது பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளது.. இவரது மனைவி, என்னுடைய மனுதாரர் ராஜா உட்பட மொத்தம் 8 பேரை திருமணம் செய்துள்ளார். இந்த 8 பேரில் என்னுடைய மனுதாரர் தான் கடைசி கணவர்... ஏற்கனவே நடந்த 7 திருமணம் பற்றி, மனுதாரர் ராஜா கேட்டதால், கொடுமைப்படுத்தியதாக அவர் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்" என்றார்.
வழக்கறிஞர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தபோதே, மனைவியின் வழக்கறிஞர் குறுக்கிட்டு, "இல்லை.. இல்லை.. 8 திருமணம் எல்லாம் செய்யவில்லை, வெறும் 4 திருமணம் தான் செய்துள்ளார். 8 திருமணம் என்று பொய் சொல்லும் கணவர் மீது, அவதுாறு வழக்கு தொடர போகிறோம்" என்றார்.
ஆவணங்கள்: இதைக்கேட்டதும் மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, "8 திருமணங்களைதான் மனைவி செய்திருக்கிறார்.. எங்களிடம் ஆவணங்கள் உள்ளன. கடந்த முறை நடந்த விசாரணையின்போதே, அவரது 5 கணவர்களும் ஆஜராகியிருந்தார்கள்" என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அந்த பெண்ணுக்கு 8 கணவன்களா? 4 கணவன்களா? என்று தெரியாததால், 8 திருமணங்கள் செய்தது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டார்.
இதுபோலவே கடந்த மாதம் அலகாபாத் ஹைகோர்ட்டில் ஒரு விவாகரத்து விசாரணைக்கு வந்தது. பிரபஞ்சல் சுக்லா என்பவர் மீஷா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். தன்னிடம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், இயற்கைக்கு மாறாக உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதாகவும், ஆபாச படங்கள் பார்க்க வற்புறுத்துவதாகவும் கணவர் மீது இளம்பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
உண்மை அம்பலம்: நீதிபதி அனிஷ் குமார் குப்தா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், வரதட்சணை கொடுமை நடக்கவேயில்லை என்பது அம்பலமானது. அப்படியானால், உண்மையிலேயே தம்பதிக்குள் பிரச்சினை என்ன? என்று விசாரித்தபோது, உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது, பாலியல் உறவில் ஈடுபட மனைவி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். உடலுறவை தவிர்ப்பதற்காகவே, கணவன் மீது பொய்யான வரதட்சணை புகார் தந்தது உறுதியானது. இதை கண்டித்த நீதிபதி, "ஒழுக்கமான சமூகத்தில் ஒருவர் தனது சொந்த மனைவி அல்லது கணவரை தவிர இல்லற சுகத்திற்கு வேறு எங்கும் போக முடியாது" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜீவனாம்சம்: இதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண், தனது கணவரிடம் மாதம் மாதம் பராமரிப்பு தொகை 6,16,000 ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அந்த மனுவில், முழங்கால் வலி, பிசியோதெரபிக்கு மாதம் 4-5 லட்சம் ரூபாயும், ஷூ மற்றும் ஆடைகள் வாங்க மாதம் 15000 ரூபாயும், வீட்டிற்குள் உணவுக்காக மாதம் 60000 ரூபாயும், வீட்டிற்கு வெளியே சாப்பிட இன்னும் சில ஆயிரங்கள் தேவை என்று பராமரிப்பு செலவுக்கான லிஸ்ட் தந்திருந்தார்.
இந்த லிஸ்ட்டை பார்த்த நீதிபதி, இவ்வளவு பணத்தை தனியாக இருக்கும் பெண் செலவு செய்வாரா? அவருக்கு பணம் வேண்டும் என்றால், சம்பாதிக்க சொல்லுங்கள். கணவரிடம் இருந்து இதனை எதிர்பார்க்க வேண்டாம். உங்களின் அடிப்படை தேவைக்கு மட்டும் என்ன பணம் வேண்டுமோ அதனை கேளுங்கள்.. இவ்வளவு பணத்தை தர வேண்டும் என்று கணவருக்கு தண்டனை தர முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக கூறியிருந்தது நாட்டு மக்களின் கவனத்தை பெற்றிருந்தது.
சபாஷ்: இப்படி சமீப காலங்களாகவே நாளுக்கு நாள் உறவு சிக்கல்கள் குடும்பங்களில் அதிகரித்து வரும்நிலையில், தம்பதியினரின் ஒற்றுமை, அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் குடும்ப உறவுகளில் நீதிமன்றங்கள் காட்டும் அக்கறையானது, மிகுந்த கவனத்தை செலுத்தி வருவதும் இங்கு பாராட்டத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.