சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்குள் தேர்வை முடிக்கவும் உத்தவிட்டுள்ளது. விடுமுறையை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை போலவே இந்த 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வட மாவட்டங்களை பதம் பார்த்தது. கடந்த 30 மற்றும் 1 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் இடைவிடாது விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால், விழுப்புரம், கடலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
பெஞ்சல் புயல் கரை கடந்தபொது, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 50 செ.மீ., மழை கொட்டியுள்ளது. இதனால் விழுப்புரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை விட்டு ஓரிரு நாட்கள் ஆன போதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களிலும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி திங்கட் கிழமை தான் விழுப்புரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. வரும் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்குள் தேர்வை முடிக்கவும் உத்தவிட்டுள்ளது.
மழைநீர் வடிந்து பள்ளிகள் திறக்கும்போது 10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெறும். விடுமுறையை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை போலவே, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையிலும் விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage