எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் தம்பி.. அதுவும் எப்படி தெரியுமா? அவரே சொன்னது..

post-img

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து காலமான பிறகு அவருடைய கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.
அதுபோல சீரியலிலும் ஆதி குணசேகரன் வீட்டில் சண்டை போட்டுவிட்டு கிளம்பி போய்விட்டதாக கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மாரிமுத்துவின் தம்பி பேட்டி ஒன்றில் இந்த சீரியலில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய முடிவு இதுதான் என்று பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.


சின்னத்திரையில் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு காரணமாக இருந்த குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென்று காலமானார். அவருடைய மறைவுக்குப் பிறகு சீரியல் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். இந்த சீரியலை அதிகமான ரசிகர்கள் விரும்புவதற்கு காரணமே குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து பேசிய மாஸ் ஆன வசனங்களும், அவருடைய உடல் மொழியும்தான்.


ஆனால் அவர் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக நடிக்க வரும் நடிகரால் மாரிமுத்து போன்று நடிக்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான். யாராலும் மாரிமுத்துவை போன்று ஆதி குணசேகரன் கேரக்டரில் வாழவே முடியாது என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத கருத்தாக இருக்கிறது. ஆனாலும் சீரியலை தொடர்வதற்காக ஒரு சில முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் சில பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீரியல் தரப்பில் இருந்து இன்னும் யாரையும் இந்த கேரக்டருக்காக செலக்ட் பண்ண வில்லையாம். இந்த நிலையில் மாரிமுத்துவின் தம்பி பேட்டி ஒன்றில் இது பற்றி பேசி இருக்கிறார். இப்போது வரைக்கும் மூன்று பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் யாரையும் சீரியல் அணியினர் தேர்ந்தெடுக்க வில்லையாம். யார் வந்து நடித்தாலும் இனி குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்துவாக நடிக்க முடியாது என்று எனக்கு தோன்றுகிறது என்று பேசி இருக்கிறார்.


அத்தோடு எதிர்நீச்சல் வீடியோவிற்கு வரும் கமெண்ட்களை பார்ப்பேன். அப்போது பலர் மாரி முத்துவின் தம்பி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அது அண்ணன் விருப்பப்பட்டு நடித்து வந்த கேரக்டர். அதில் அவர் நான் நடித்தால் சந்தோஷப்படுவார் என்றால் நான் நடிக்க தயார். அதுபோல இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் கேட்டால் நான் சரி என்று தான் சொல்லுவேன்.


ஆனால் எனக்கு நடிப்பு பெரிய அளவில் வராது. அதுபோல நடிக்க வேண்டாம் டப்பிங் மட்டும் பேசுவது என்றாலும் எனக்கு ஓகே தான். ஏனென்றால் எனக்கும் அண்ணனுக்கும் குரல் ஒரே போல தான் இருக்கும். பல பேர் நாங்கள் போனில் பேசினால் யாரு பேசுறது மாரிமுத்துவா ராமமூர்த்தியா என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு எங்களுடைய குரல் ஒன்று போல இருப்பதால் நான் டப்பிங் பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

 

இந்த நிலையில் ரசிகர்கள் மாரிமுத்துவின் தம்பியையே டப்பிங் பேசுவதற்காக பயன்படுத்தலாம். அப்போது தான் மாரிமுத்து கம்பீரம் வரும் என்று கருத்து கூறி வருகின்றனர். ஒருவேளை புதிய கேரக்டர் கிடைப்பது வரைக்கும் பொறுத்திருந்து, இவரை டப்பிங் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் குணசேகரன் வீட்டை விட்டு வெளியே போய் இருப்பது போன்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள். இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அண்ணன் காலில் பிளேடால் கிழித்து விட்டேன்.. மறைந்த மாரிமுத்து பற்றி தம்பி உருக்கம்..நெகிழ்ச்சி காரணம்

 

Related Post