இதுதான் என் நேபாள் பூர்வீக வீடு.. ஷர்மிளா போட்ட வீடியோ: யார் தெரிகிறதா மக்களே?

post-img
நேபாளம்: டிவி தொகுப்பாளினி ஷர்மிளா தாபா தனது நேபாள பூர்வீக வீட்டைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்களை ஹோம் டூர் வீடியோ வெளியிட்டு விளக்கி இருக்கிறார். தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனைப் பேரையும் மக்கள் நினைவு வைத்திருப்பார்களா எனது தெரியாது. அவர்களின் தனித்து தெரிபவர் ஷர்மிளா தாபா. ஏதோ மலையாளப் பட டைட்டில் போல் இருக்கிறது இவரது பெயர். பிறப்பால் நேபாளியான இவர் மிக அழகாக தமிழ் பேசி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து காமெடியாக வழங்கி இருக்கிறார். இவரது பூர்வீகம் நேபாளத்தைச் சேர்ந்த பரத்பூர் பக்கம் இருக்கும் நாராயங்கட் என்ற ஊர்தான். அங்குப் பிறந்த இவர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் கற்றுக் கொண்டு ஒரு தொகுப்பாளினி அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இவர் படித்தது சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கல்லூரியில்தான். பல ஆண்டுகள் சென்னையில்தான் வாழ்ந்தார், வடிவேல் பாலாஜியுடன் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அஜித், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து நடித்த தாபா, கடந்த 2019இல் டான்ஸ் மாஸ்டர் ரகுவை திருமணம் செய்து கொண்டார். ஷர்மிளா தாபாவும் அவரது கணவர் ரகுவும் சேர்ந்து இப்போது டியூடியூப் உலகில் பிரபலமாக மாறியுள்ளனர். ஆகவே, டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டுவது இல்லை. அது சரி, இப்போது ஏன் இவரைப் பற்றிப் பேச வேண்டும் என்கிறீர்களா? அதற்குக் காரணம் இருக்கிறது. ஷர்மிளா தாபா தனது நேபாள நாட்டில் உள்ள பூர்வீக வீடு பற்றி ஒரு ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அசல் நேபாள உடையில் இருக்கிறார். அவரது வீடு உள்ள கிராமம் முழுக்க கம்பு பயிர்செய்யும் தோட்டம் நிறைந்து காணப்படுகிறது. இவரது வீடு இரண்டு மாடிகள் கொண்டு மிகப் பெரிதாக இருக்கிறது. வீட்டின் முன் பக்கம் அதிகம் புழங்கமாட்டார்களாம். வீட்டின் கொளைப் பக்கம்தான் அதிகம் இருப்பார்களாம். எனவே வீட்டு முன்பக்க வாசல் மூடியே தான் இருக்கும் என்கிறார். இவர் நாட்டிலும் கொசு தொல்லை இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜன்னல்களுக்குக் கொசு வலைப்படுவதைப் போலப் போட்டுள்ளனர். இவர் கிராமத்தில் டியூப் லைட்ஸ் கிடையாதாம். முழுக்க குண்டு பல்ப் தான். ஏறக்குறைய தாபாவின் ஊரில் உள்ள வீடுகளைப் பார்த்தால் பாதி இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் உள்ள வீடுகளைப் போலவே இருக்கிறது. அதேபோல் வீடுகளில் உள்ள அடி பம்ப் கூட தமிழ்நாட்டில் 30 வருடங்கள் முன்னால் இருந்த கை பம்பு போல் உள்ளது. அதிகமாக மூங்கில் கூடைகளை இந்த ஊர் மக்கள் வீட்டில் பயன்படுத்துகின்றனர். ஷர்மிளா சொல்கிறார் அவரது ஊரில் எல்லா வீட்டு முன்பாகவும் ஒரு கடையைக் கட்டி வைத்திருப்பார்களாம். அது எவ்வளவு குக்கிராமமாக இருந்தாலும் அப்படித்தான் இருக்குமாம். காரணம் பிற்காலத்தில் வாடகைக்கு விடலாம் என்பதற்காக என்கிறார் தாபா. இவர் வீடு உள்ள கிராமம் அழகான மலைக் கிராமமாக உள்ளது. இங்கே வீடு கட்டுபவர்கள் நடுவில் ஒரு வராண்டாவை விட்டுவிட்டு எதிர் எதிரே அறைகள் உள்ளதைப் போல் கட்டிவிடுகிறார்கள். நம் வீட்டில் உள்ள போனால் முதலில் வரவேற்பறை அடுத்து படுக்கை அறை, பின் சமையலறை என்ற பாணி கிடையாதாம். தனித் தனி அறையைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிறார். இவர் வீட்டின் அருகேயும் இவர் வீட்டிலும் மாட்டுத் தொழுவம் பல ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டில் உள்ளதைப்போன்றே உள்ளது. ஓலைக் கொட்டாவை போன்ற அதில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். எருமைப் பால் பிரதானமாக இங்கு உள்ளது. இவர் வீட்டிலிருந்து சற்று தெருமுனைக்குச் சென்றால் இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் முக்கிய சாலை இருக்கிறது. ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்தில் தாபாவின் உறவினர்கள் வசிக்கின்றனர். மாமா, பெரியப்பா எனப் பலரும் ஒரே பகுதியில் வாழ்வதுதான் மகிழ்ச்சியான விசயம் என்கிறார் தாபா.

Related Post