"டாப் 2".. இது வேறயா.. தமிழ்நாட்டுக்கு ஹேப்பி.. அடுத்த லெவல் போகும் "செல்வ மகள்".. என்னன்னு பாருங்க

post-img

அந்த வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட "சுகன்யா சம்ருதி யோஜனா - Sukanya Samrudhi Yojana" என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம், 2015-ம் ஆண்டு, ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடியால் ஆரம்பிக்கப்பட்டது.


செல்வமகள்: அதன்படி, இந்தியாவில் பெண் குழந்தைகளின் திருமண செலவு மற்றும் பிற செலவுகளுக்கான மாபெரும் சேமிப்பு திட்டமாக செல்வமாக சேமிப்பு திட்டம் விளங்கி வருகிறது. அதாவது, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலேயே செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை ஆரம்பிக்கலாம்.. பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 2021-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 1.42 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 29.12 லட்சம் புதிய கணக்குகளை ஆரம்பித்து உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

                                                                        top 2 tamil nadu and wealth saving scheme selva magal semippu thittams new announcement

குறைந்த முதலீடு: இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.250. ஆரம்பத்தில் இந்தத்தொகையானது 1,000 ரூபாயாக இருந்தது.. அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச முதலீட்டு தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.250-க்குப் பிறகு, ரூ.50-ன் மடங்குகளில் அதாவது ரூ.300, ரூ.350, ரூ.400 என்பது போல் முதலீடு செய்து வரலாம். இந்தத் திட்டம் ஆரம்பிக்கபட்டபோது ஆண்டுக்கு 9.6% வட்டி வழங்கப்பட்டது.


நாட்டில் வட்டி விகிதம் படிப்படியாகக் குறைந்து வரவே, பிறகு, 8% வரைக்கும் வட்டி வழங்கப்படுகிறது. இதனால், எக்கச்சக்கமான பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கி உள்ளனர்.. இதுவரை தமிழகத்தில் மட்டுமே 38 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குழந்தைகளின் பேரில் பெற்றோர்கள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போனை எடுங்க.. போட்டோ எடுங்க.. போட்டுக்கொடுங்க.. சென்னை மக்களே.. உங்களுக்குத்தான் இது! டாப் 2 : அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களில் இப்போது, தமிழகம் 2ம் இடத்தை பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பெயரிலும் செல்வமாக சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு திறக்க விரும்பினால் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகலாம் என்று அறிவிப்பு ஒன்று பிரத்யேகமாக வெளியாகி உள்ளது.

Related Post