ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ திட்டம் இருப்பது போல் தெரிகிறது.. தொல் தொல் திருமாவளவன்

post-img
திருச்சி: ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு இல்லை என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்றும், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதோ மறைமுக திட்டம் இருப்பது போல் தெரிகிறது என்றும் தொல் திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திமுகவுடன் கூட்டணியில் உள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதன் கொள்கைகளை அறிவித்தார். அப்போது அவர் திமுக தான் அரசியல் எதிரி என்றும் பாஜக தான் கொள்கை எதிரி என்றும் அறிவித்தார். மேலும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதையும் கூறினார். ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கூறி வருவதால், விஜய் திருமாவளவனுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தது போலவே இது பார்க்கப்பட்டது. இதற்கிடையே எல்லாருக்குமான அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதலில் விஜய் புத்தகத்தை வெளியிட அதனை திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால், பல்வேறு யூகங்களுக்கு வழிவகுக்கும் என்று கருதி திருமாவளவன் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக விசிக துணை பொதுசெயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் தொல் திருமாவளவனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆதவ் அர்ஜுனாவை விகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று பேசிய தொல் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு இல்லை என்று கூறியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:- ஆதவ் அர்ஜுனா இப்படி பேசி வருவது அவருக்கு வேறு எதோ ஒரு திட்டம் இருப்பது போல் தெரிகிறது. அவருக்கு ஏதோ மறைமுக செயல் திட்டம் இருப்பது போல் தெரிகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Post