தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காங்கிரஸ் நிர்வாகியை அவரது தாய் மற்றும் தம்பி உருட்டை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்தவர் வேம்பு குரு மற்றும் அவருடைய மனைவி லட்சுமி (வயது 59)க்கு மாரிசெல்வம் (30), மணிகண்ட சங்கர் (25) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
இதில் மாரி செல்வத்துக்கு 30 வயது ஆகிறது.. இவர் காங்கிரஸ் கட்சியில் கருங்குளம் வட்டார செயலாளராக இருந்து வந்தார். இவர் தனது அப்பா அம்மாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் கடந்த 3-ந் தேதி மாரிசெல்வம் தாயார் லட்சுமியிடம் மீண்டும் பணம் கேட்டிருக்கிறாராம். ஆனால் லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டதால், அப்போது வாய் தகராறு ஏற்பட்டது
இதில் தாயார் லட்சுமிக்கு ஆதரவாக ஓடிவந்த மாரிசெல்வத்தின் தம்பி மணிகண்டன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த லட்சுமியும், மணிகண்டனும் இணைந்து உருட்டுக் கட்டையால் மாரிசெல்வத்தினை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கொட்டிய மழையில் குடையுடன் களமிறங்கிய தூத்துக்குடி மேயர்! 3 மணி நேரத்தில் காணாமல் போன தேங்கிய நீர்!
இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து சுருண்டு விழுந்த மாரிசெல்வத்தினை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயார் லெட்சுமி, மற்றும் தம்பி மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில் மாரிசெல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்துபோனார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் கொலை வழக்குப் பதிவு செய்து லட்சுமி, மணிகண்டன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. காங்கிரஸ் நிர்வாகி அம்மா மற்றும் தம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage