வாஷிங்டன்: உலகிலேயே மிக நீளமான ரயில் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ரயில் மொத்தம் 7 கிமீ நீளம் கொண்டது. அதாவது நம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை நிறுத்தினால், கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை நிற்கும் அளவுக்கு தூரம் கொண்டது. இந்த ரயில் எங்கு ஓடுகிறது, எத்தனை கி.மீ தூரம் செல்கிறது என்பனவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் பொதுப்போக்குவரத்து அமைப்புகளில் மிக முக்கியமானதாக ரயில்வேதான் உள்ளது. இந்தியா மட்டும் இன்றி பெரும்பாலான வளரும் நாடுகளில் ரயில்களே மக்களின் பிரதான பொதுப்போக்குவரத்து அமைப்பாகும். சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல கோடி மக்கள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே..
இந்தியன் ரயில்வே: இதனால், உலக அளவில் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்டதாக இந்திய ரயில்வே உள்ளது. அதேவேளையில் ரயில்வே துறையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய ரயில்வே சற்று பின் தங்கியுள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் அந்த நாடுகளுக்கு இணையாக ரயில்வே சேவையின் தரத்தை மேம்படுத்த இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.
மிக நீளமான ரயில்: சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்... உலகிலேயே மிக நீளமான ரயில் ஆஸ்திரேலியாவில் தான் ஓடுகிறது. இரும்பு தாது பொருட்களை ஏற்றி செல்லும் ஆஸ்திரேலிய ரயில்தான் உலகின் மிக நீளமான ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. அப்படி எவ்வளவு தான் நீளம் என நினைப்பது புரிகிறது... இந்த ரயிலின் நீளம் 7 கிலோ மீட்டர் ஆகும்.
ஒரே ரயிலில் 8 என்ஜின்கள்: அதாவது சென்னை எழும்பூரில் ரயிலை நிறுத்தினால் அங்கிருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோடம்பாக்கம் வரை நிற்கும். எத்தனை பெட்டிகள் இருக்கும் என நினைக்கிறீர்களா.. மொத்தமாக 682 பெட்டிகள் இருக்கிறதாம்.. என்ஜின்கள் மட்டும் 8 உள்ளன. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள போர்ட் ஹெட்லாண்டிற்கும் யாண்டி சுரங்கத்திற்கும் இடையே இந்த ரயில் ஒடுகிறது.
8.16 கோடி கிலோ: ஒரு டிரிப்பில் மட்டும் 82 ஆயிரம் மெட்ரிக் டன் ( 8.16 கோடி கிலோ) இரும்பு தாது பொருட்களை எடுத்து எச்ல்கிறது. இந்த ரயில் டீசல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் ஓடுகிறது. 275 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி நேரத்தில் சென்று இலக்கை எட்டுகிறது. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ரயிலுக்கு ஒரே ஒரு டிரைவர்தானாம். BHPஎன்றழைக்கப்படும் இந்த ரயில், அரசாங்கத்தால் இயக்கப்படவில்லை.
270 பெட்டிகள்: இரும்பு தாதுக்களை ஏற்றி செல்வதற்காக சுரங்கத்தை நடத்தி வரும் தனியார் நிறுவனமே இந்த ரயில் மற்றும் தண்டவாளம் என அனைத்தையும் பராமரித்து வருகிறது. தற்போது இந்த ரயிலுக்கு தேவை குறைந்துவிட்டதால் பெட்டிகளில் எண்ணிக்கை 270 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரயில் என்ஜின்களும் 8-ல் இருந்து 4 என பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாம்..
Weather Data Source: Wettervorhersage 21 tage