திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவுக்கு காரணம், சிவனின் கோபம்தான் என்றும், நெற்றிக்கண்ணை சிவன் திறந்துவிட்டார் என்றும், சித்தர் ஒருவர் பரபரப்பு பேட்டியை தந்திருக்கிறார். திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு என்ன காரணங்கள் என்பது குறித்தும் அந்த சித்தர் விவரமாக பேசி, வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.
புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டன.. புதுச்சேரி, விழுப்புரத்தை போலவே, திருவண்ணாமலையிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு, அண்ணாமலையார் கோவில் மலையிலிருந்து, ராட்சத பாறை ஒன்று அடிவாரத்திலுள்ள வஉசிநகர் பகுதியில் விழுந்தது.
குடியிருப்புகள்: குடியிருப்புகளுக்கு மேலேயே ராட்சச பாறைகள் விழுந்ததால், வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இதில், 7 பேர் சிக்கி உயிரிழந்தனர்.. இதற்கு முன்பு தமிழகத்தில் எத்தனையோ இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தாலும், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவானது, பல்வேறு சலசலப்புகளை உண்டு பண்ணி வருகிறது. குறிப்பாக, ஆன்மீகவாதிகள், சித்தர்கள் இதுகுறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், சித்தர் ஒருவர், திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு காரணம், சிவன் நெற்றிக்கண் திறந்ததுதான் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.. இது தொடர்பாக பல்வேறு விஷயங்களை பேசி சித்தர் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். Behindwoods O2 யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில், சித்தர் பேசியதன் சுருக்கம்தான் இது:
அதில், "திருவண்ணாமலை ஆன்மீக பூமி. இங்கு வெள்ளத்தில் தண்ணீரில் பாட்டில் மிதந்து செல்கிறது. ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் குடி, கஞ்சா போன்றவை அதிகரித்து இருக்கிறது.
சிவக் கோபம்: சென்னை, மும்பை, மதுரை, பெங்களூரில் மழை சேதம் நடக்கிறதென்றால், அவையெல்லாம் வணிகம் சார்ந்த ஊர்கள்.. அங்கெல்லாம் அவர்களின் ஆசைகளை தட்டிவிடுவதற்காக, கொஞ்சம் கொஞ்சமாக சேதம் செய்வார் பகவான்.
ஆனால், திருவண்ணாமலையில் சேதாரமா? இதில் 2 ஆச்சரிய விஷயங்கள் உள்ளன. சிவன் தன்னுடைய முகத்திலேயே சேதாரம் செய்து கொள்கிறார். அந்த சேதாரத்தை நான் உற்று பார்த்தபோது, நெற்றிக்கண் திறந்திருப்பது தெரிகிறது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவை நீங்கள் கவனித்தால், குறுகிய இடத்தில் ஆரம்பித்து, மறுபடியும் விரிந்து, மறுபடியும் குறுகிய இடத்தில் சேர்வதை பார்க்கலாம். புவியியல் அமைப்புபடி இது எப்படி நடக்கும்?
நெற்றிக்கண்: சிவன் நெற்றிக்கண்ணை திறப்பதாக கற்பனையில் நான் பேசுவதாக நினைக்கலாம். விஞ்ஞானப்பூர்வமாகவே சொல்கிறேன்.. பொதுவாக, மண்ணை, கல், பாறைகளை 3 வகையாக பிரிக்கிறார்கள்.. இதில், திருவண்ணாமலை கற்கள், லாட்டரைட் வகையை சேர்ந்தது. கற்களிலேயே உயர்ந்த ரகமாகும்.. இந்த லாட்டரைம் மீது அதன்மீது எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், உதிராது, உடையாது.. ஆனால், ஆயிரக்கணக்கான வருடம் நின்றுகொண்டிருந்த மலை, இன்று உதிர்ந்து போயிருக்கிறது.
இது மக்களுக்கான எச்சரிக்கை பாடம். அனைவரும் சரியாக இல்லாவிட்டால், ஒருகட்டத்திற்கு மேல் அவர் பொறுக்கமாட்டார். சிவன் நெற்றிக்கண்ணை திறந்ததுபோல நிலச்சரிவு இருப்பதால், அவர் கொடுக்கும் எச்சரிக்கை பாடம் இது. இப்போது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
மிகப்பெரிய பேரழிவு: திருவண்ணாமலையில் இன்று வரையில் நிலச்சரிவு என்பது ஏற்பட்டதில்லை.. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்து நிற்கும் திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ள இந்த அழிவு, சிவனின் கோபத்தையே உணர்த்துகிறது. அண்ணாமலையின் நெந்றிக்கண்ணை திறந்த பிறகாவது நாம் அனைவரும் விழிக்க வேண்டும். இல்லாவிட்டால், இதற்கு பிறகு மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து அந்த வீடியோவில், நிலச்சரிவுக்கு பல்வேறு காரணங்களை அடுக்கி பேசியிருக்கும் சித்தர், மதுவிற்பனைக்கு எதிராகவும் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கோரிக்கை: "திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.. மழைநீரில் பாட்டில் பாட்டிலாக மிதப்பதாக சொல்கிறார்கள்.. சந்தனமும், குங்குமம் மிதக்க வேண்டிய பூமியில் பாட்டில் மிதக்குது.. குஜராத்தில் முழு மதுவிலக்கு செய்தார்களே, அதுபோல திருவண்ணாமலை மண்ணில் மட்டுமாவது மது இருக்கக்கூடாது என்று சட்டம் போட முடியாதா? அரசு மது விற்பனை தூக்கி எறிய வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டுள்ளார் அந்த சித்தர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதே கருத்தைதான், நடிகர் அனுமோகனும் வேறொரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.. "நிலச்சரிவு என்பது இந்த வருடமே நடக்கும். தென்னிந்தியாவில் முக்கடல் பொங்கும்.. அதாவது அரபிக்கடல், வங்கக்கடல், இந்துமகா சமுத்திரம் மூன்று கடலுமே ஒன்றாக பொங்கும்.. கடலுக்கு கீழே எரிமலை வெடிக்குமாம். அது சுனாமியாக வரும்.. அப்போது ராவண பூமி கடலில் மூழ்கும் என்று சித்தர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். மனிதன் இதை சந்தித்தே ஆகணும். அதனால் எப்போதும் அரசாங்கத்தை குறை சொல்லியோ, அடுத்தவரை குறை சொல்லியோ பிரயோஜனமில்லை.. இயற்கைக்குண்டான மரியாதையை மனிதன் தந்தே ஆகவேண்டும்" என்றெல்லாம் அனுமோகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage