மதுரை பேரையூர் பகுதியை சேர்ந்த 17 வயசு சிறுமி, தவறான உறவால் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது சிறுமியும் அவரது தாயும் அங்கிருந்து யாரிடமும் கூறாமல் பேரையூர் வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேரையூர் கிராம செவிலியர் காந்திமதிக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்ற காந்திமதிக்கு குழந்தையை காட்ட மறுத்துள்ளனர். இதனால் காந்திமதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் ரூ 8.20 லட்சத்திற்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை விலைக்கு வாங்கியதாக எல்ஐசி ஊழியர் தேஜஸ்வரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீஸார் குழந்தையை மீட்டதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய உசிலம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் தாமரைச் செல்வன் மற்றும் செவிலியர் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.