ஆடம் கஸ்ஸக், அலி பேடோன் ஆகிய இரு மாணவர்களும் லெபனான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் டிக் டோக் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்கள் வீடியோக்களின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுகிறார்கள்.
அப்பகுதிகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு, இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதல்களால் தங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளனவா என்பதை அடையாளம் காண இவர்களின் வீடியோக்கள் உதவுகின்றன.
"ஊடகங்கள், மக்கள் யாரும் செல்ல முடியாத நிலையில், வெளியுலகுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதைக் காட்டுவது தங்கள் கடமை" என்று கூறுகிறார் அலி பேடோன்.
மேலும், "கிறிஸ்தவரோ, முஸ்லிமோ, யூதரோ அனைவருமே ஒரே பெரிய குடும்பம்" எனக் கூறும் இந்த மாணவர்கள், தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முயல்வதாகக் கூறுகின்றனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage