சிம்பு, விஷால் உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு?தயாரிப்பாளர் சங்கம்

post-img

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுத்துள்ளனர்.

Tamil Film Producers Council To Give Red Notice to 5 Actors

அதில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றனர். இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு கூறுமாறு தெரிவித்திருக்கின்றனர். நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

Related Post