மிஸ் பண்ணாதீங்க.. ரயில்வே, தேர்தல் கமிஷன் உள்பட பல இடங்களில் ஆட்களை தேர்வு செய்து வருகிறது

post-img

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய செயலகம், ரயில்வே, இந்திய தேர்தல் ஆணையம் உள்பட பல இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எஸ்எஸ்சி எனும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (பணியாளர் தேர்வு ஆணையம்) மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வருகிறது.


அந்த வகையில் தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது.

அதன் விபரம் வருமாறு:
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு 2018, 2019 நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் 5 துறைகளில் காலியாக உள்ள 384 ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.
அதன்படி மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் பணிக்கு 342 பேர், ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராபர் பணிக்கு 17 பேர், ஆயுதப்படை தலைமையக ஸ்டெனோகிராபர் பணிக்கு 19 பேர், இந்திய தேர்தல் ஆணையம் ஸ்டெனோகிராபர் பணிக்கு 2 பேர், இந்திய வெளியுறவு சேவை பிராஞ்ச் (பி) ஸ்டெனோகிராபர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

2018 ஆட்சேர்ப்பு ஆண்டின் படி, 01.07.2018ம் தேதியின் அடிப்படையிலும், 2019 ஆட்சேர்ப்பின் படி, 01.07.2019 தேதியின் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, ,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரைதளர்வு வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.



தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை Regional Director, Staff Selection Commission (Northern Region), Block No.12, C.G.O Complex, Lodhi Road, New Delhi - 110 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் Computer Based Examination, Skill Test மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் கூடுதல் விபரங்களை கீழே உள்ள அதிகார்பபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post