சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்துள்ளதுதான், இன்றைய ஹாட் களமாக மாறியிருக்கிறது. சீமானின் பேச்சினை, வழக்கம்போல் அவரது தம்பிகள் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. மற்றொருபுறம், இதற்கு பாஜகவினர் திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது.. இருவருமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்..
விஜயலட்சுமியை திமுக தூண்டிவிடுகிறது என்று சீமான், பகீரை கிளப்பியுள்ளதால், அரசியல் ரீதியாகவும் இந்த தாக்கம் ஏற்பட்டு வருகிறது.. மற்றொருபுறம், சீமானுக்கான நெருக்கடிகள் கூடிவருவதாகவும், இணையத்தில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
திமுக விமர்சனம்: இத்தனை காலமும், திமுகவை முதல்நபராக ஓடோடிவந்து விமர்சித்து வந்த சீமான், கடந்த சில நாட்களாகவே திமுகவை சீண்டவில்லை.. ஓவராக விமர்சிக்கவுமில்லை.. திமுகதான் எல்லாத்துக்கும் காரணம், திராவிடத்தை ஒழிப்பதே எங்கள் லட்சியம் என்று இத்தனை நாளும் சொல்லிக்கொண்டிருந்த சீமான், "திராவிடத்தை ஒழிப்பது எங்கள் நோக்கம் கிடையாது, மாறாக, தமிழ் தேசியத்தை வளர்ப்பதுதான் நோக்கம்" என்று "தோசையை" திருப்பி போட்டுள்ளார்.
இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை சீமான் குறித்து பேசும்போது, "சீமான் அண்ணனை ஒரு தைரியமானவர் என்றே நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால், இந்த ஒரே ஒரு மேட்டர், அண்ணனை எப்படி பயப்பட வெச்சிருக்குதுன்னு பாருங்க.. திமுகவுக்கு இப்படி சப்போர்ட் பண்றதுக்கு பேசாம, திமுக B டீம் சீமான் சொல்லிட வேண்டியதுதானே" என்றார் அண்ணாமலை..
சாமியார் தலையை சீவுங்க! நான் 100 கோடி தரேன்! கசாப்பு கடைக்காரர் கணக்கா பேசுறாரே.. சீமான் கொந்தளிப்பு
கடும் விமர்சனம்: மேலும், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் சீமான் பேசியிருக்கிறார்.. அதுதான் இணையத்தில் படுவேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. அதன் சுருக்கம்தான் இது:
"பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிகாரியாக இருந்து வந்தவர்... கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியார் இதில் எல்லாம் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று அண்ணாமலைதான் சொல்ல வேண்டும். தமிழ் தேசியம் ஒன்று இல்லை என்றே சொன்னால், அடிப்படையில் தமிழ்நாடு என்றாலே தமிழ் தேசியம்தானே. தமிழ் தேசியம் என்று இல்லை என்றால், மோடி போகும் ஒவ்வொரு நாட்டிலும் போய் தமிழை பற்றி ஏன் பேசுகிறார்?.
கன்னடியன்: நீங்கள் கர்நாடகாவில் இருக்கும்போது, கன்னடத்தில் "பிரவுட் கன்னடியன்" என்று பேசிவிட்டு கர்நாடக பாஜக தலைவராக வேண்டியதுதானே? எதுக்கு இங்கே வந்தீங்க? நான் மோடி, அமித்ஷா ஆகியோருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, அண்ணாமலை நீங்க ஏன் குறுக்க மறுக்க வர்றீங்க? ஓரமாக போய் நில்லுங்கள்...
என் கட்சியில் நான் முடிவு எடுக்கிறேன். நீங்கள் முடிவு எடுக்க முடியுமா? இந்த கட்சி நான் உருவாக்கியது, நீங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு அந்த கட்சியில் தலைவராக இருப்பீங்க? இன்னும் 2 வருஷம் இருப்பீங்களா? பொன் ராதாகிருஷ்ணன் போல இதுக்கு முன்னாடி இருந்த பாஜக தலைவர்கள் எல்லாம் எங்கே போனாங்க?
ராஜா மாதிரி: நீங்க தமிழ்நாட்டுக்கு ஒரு மேஸ்திரி. நான் அப்படி கிடையாது. நான் ராஜா மாதிரி.. என்னால் முடிவு எடுக்க முடியும்.. 20 தொகுதியில் ஆண்களையும், 20 தொகுதியில் பெண்களையும் நிறுத்த முடியும்" என்று சீமான் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் சீமான் பேசும்போது, "சனாதனம் குறித்து உதயநிதி கருத்து சொன்னால், அமித்ஷா எதுக்கு கோபப்படுகிறார்? அமித்ஷாவுக்கு, சாதியும் மதமும் வேண்டும்.. அவருக்கு அது 2 கண்கள்.. நாயில் கூட உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இருக்கு.. இதெல்லாம் ஒருவித மனநோய். இந்த வைரஸ்களை ஒழிக்க முடியும்.. பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழிக்க முடியாமலே இருக்கிறது.. அதனை ஒழிக்க முடியும், ஆனால் எல்லோரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும்... ஏற்ற தாழ்வுகளை சரிசெய்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்ய வேண்டும்" என்றார்.
உதயநிதி : அண்ணாமலையை சீமான் பேசியது மட்டுமல்ல, பொள்ளாச்சியில் உதயநிதியின் பேச்சுக்கு சப்போர்ட் தந்து, சீமான் பேசியிருக்கும் "டோன்", பலரையும் கவனிக்க வைத்து வருகிறது. இதுகுறித்த விமர்சனங்களும், விவாதங்களும் மீண்டும் சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன..!!!