வரலாற்றில் முதன்முறை.. கேரள கழிவுகள் கேரளாவுக்கே! ரிட்டர்ன் அனுப்பிய தமிழக அரசு! சிக்கிய ஐவர் அணி!

post-img
நெல்லை: கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அந்த கழிவுகளை அகற்றி மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லும் பணியானது நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 450 டன் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை., தென்காசி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. பலமுறை இது தொடர்பாக போராட்டங்களும் வெடித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கேரளாவின் அத்துமீறல்கள் தொடர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதை அடுத்து விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை அகற்றும் பணியில் கேரளா அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் சாக்ஷி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்துள்ளனர். மேலும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு நெல்லை முழுவதும் 5 இடங்களில் கேரள கழிவுகள் அகற்றப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொண்ட நகரம், பழவூர் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ கழிவுகள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருந்தார். தொடர்ந்து இலந்தை குளம், வேளார்க் குளம், கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு 18 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் கொண்ட நகரம், பழவூர் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ கழிவுகள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருந்தார். தொடர்ந்து இலந்தை குளம், வேளார்க் குளம், கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு 18 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. தமிழக எல்லை வரை தமிழக போலீசாரும் கேரளா எல்லையில் இருந்து கேரளா காவல்துறையினரும் பாதுகாப்புடன் இந்த கழிவுகளை கொல்லம் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கழிவுகள் கொட்டியது சம்பந்தமாக நெல்லை மாவட்டத்தில் நான்கு காவல் நிலையங்களில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, மனோகரன், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லத்துரை, கேரள மாநில வேஸ்ட் மேனேஜ்மென்ட் அலுவலர் நித்தின் ஜார்ஜ், கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கு ஏஜென்ட் போல் செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த சடானா நந்தன் ஷாஜி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக இரண்டு பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

Related Post