அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக பாலியல் பலாத்காரம்! கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகளாம்! திடுக்

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட குணசேகரனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். அவர்களில் முதல் மனைவி, இவருடைய துன்புறுத்தல் காரணமாக பிரிந்து சென்றுவிட்டாராம். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த நண்பரை மிரட்டி விரட்டியடித்துவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கோட்டூபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளகளை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகின. அதாவது ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறம் பிரியாணி கடை வைத்திருக்கிறாராம். அவருக்கு தினமும் ரூ 2000 வருமானம் கிடைக்குமாம். இந்த நிலையில் இந்த பிரியாணி கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் ஞானசேகரன், அங்கு யாராவது காதலர்கள் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை மறைந்திருந்து வீடியோ, போட்டோ எடுத்துக் கொள்வாராம். பிறகு அவர்களிடம் போய் அந்த வீடியோ, போட்டோவை காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் பணம் பறிப்பதுமாக இருந்துள்ளார். இப்படி ஏற்கெனவே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகளாம். முதல் மனைவிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் ஞானசேகரனின் டார்ச்சர் தாளாமல் பிரிந்து தனியே சென்றுவிட்டாராம். இந்த நிலையில் ஞானசேகரனை கைது செய்த போது அவர் தப்பி ஓட முயற்சித்த போது கீழே விழுந்து இடது கால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பழமைவாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் இது போன்ற நிகழ்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post