விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தியப் பிறகு கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து எவ்வித ஆக்சனை யும் எடுக்காமல் இருந்து வரும் விஜய், கடந்த வாரம் முக்கியமான ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அதில், மண்டல மாநாடுகளை நடத்துவது என அலசப்பட்டுள்ளது. அதாவது கோவை, சேலம், திருச்சி, நாகை அல்லது திருவாரூர், மதுரை, நெல்லை அல்லது கன்னியாகுமரி ஆகிய மாவட்ட தலை நகரில் மாநாடு நடத்தலாம் என்றும், இறுதியில் சென்னையில் நடத்தலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனை அலசிய விஜய், சென்னையைத் தவிர்த்து 6 மாவட்டங்கள் வருகிறது.
6 மாவட்டங்களில் மாநாடு நடத்த வேண்டுமானால் ஒரு மாநாட்டுக்கும் மற்றொரு மாநாட்டுக்கும் குறைந்த பட்சம் 2 மாதங்களாவது இடைவெளி தேவைப்படும். அப்படியானால் கிட்டத்தட்ட 1 வருடம் தேவை. இது சாத்தியமா? மண்டல மாநாட்டிற்கே நேரம் செலவழித்தால் தேர்தல் பணிகள் எப்படி நடக்கும் ? அதற்கு நேரம் தேவைப்படாதா? இதற்கிடையில், என்னை மாவட்ட சுற்றுப்பயணம் வேறு போகச் சொல்கிறீர்கள்.
இதற்கெல்லாம் நேரம் இருக்குமா? செலவுகளை நம் கட்சியினர் சமாளிப்பார்களா? என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார் விஜய். அப்போது, மாநில நிர்வாகிகள், வேறு வழியில்லை. இதையெல்லாம் செய்தால் தான் மக்களிடம் நாம் போய்ச் சேர முடியும். வேண்டுமானால், 6 மண்டல மாநில மாநாடு என்பதை 3 ஆக சுருக்கி கொள்ளலால். கோவை , திருச்சி, மதுரை என வைத்துக் கொள்வோம். தேர்தல் நெருக்கத்தில் சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என சொல்லி யிருக்கிறார்கள். இதனை உள் வாங்கிய விஜய், மண்டல மாநாடு குறித்து ஒரு ட்ராப் தயாரித்துக் கொடுங்கள். பிறகு முடிவு செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளாராம்.
யாத்திரை பிளான்: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது முக்கியமான அரசியல் ஆலோசகர் ஒருவர். இப்போது விஜய்க்கு பின்னனியில் இருக்கும் நபரும் அதே மாஸ்டர்மைண்ட்தான். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அந்த அரசியல் ஆலோசகர்தான் விஜய்க்கு யாத்திரை ஐடியாவை கொடுத்துள்ளாராம்.
விஜய் யாத்திரை: தற்போது விஜய்க்கு இவர்தான் தேர்தல் பணிகளை செய்கிறார். இதனால் ஜெகன் மோகனை போலவே நடிகர் விஜய் அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.