இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் கடந்த 2 வருடமாக செலவுகளை குறைக்கும் விதமாக தனது அலுவலகத்தை 2 ஆம் மற்றும் 3 ஆம் தர நகரங்களுக்கு மாற்றி வரும் வேளையில் ஏற்கனவே கோயம்புத்தூரில் ஐடி பிரிவுக்கான அலுவலகத்தை துவங்கிய நிலையில், தற்போது மீண்டும் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது.
இன்போசிஸ் கோயம்புத்தூரில் SVB டெக் பார்க்-ல் மார்ச் 24 ஆம் தேதி தனது ஐடி சேவைக்கான புதிய டெலிவரி சென்டரை திறந்தது, இந்த டெக் பார்க்கில் மொத்தம் 7 தளத்தை இன்போசிஸ் கைப்பற்றி தனது அலுவலகத்தை திறந்துள்ளது. இதேவேளையில் டிசிஎஸ் தனது புதிய அலுவலகத்தை திறக்கும் முயற்சியில் தீவிரமாக இறக்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இன்போசிஸ் BPM தனது புதிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. இப்புதிய இன்போசிஸ் BPM கோயம்புத்தூர் டெலிவரி சென்டரை இப்பிரிவு சிஇஓ மற்றும் நிர்வாக தலைவரான அனந்த ராதாகிருஷ்ணன், உயர் துணை தலைவர் மற்றும் குளோபல் HRD பிரிவு தலைவர் தீபேந்திரா மாதூர் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இன்போசிஸ் கோயம்புத்தூர் அலுவலகம் விரிவாக்கம் செய்த நாளில் இருந்து, இந்தியா முழுவதும் இருக்கும் தமிழ்நாட்டு ஊழியர்கள் கோயம்புத்தூர்-க்கு டிரான்பர் கேட்டு வருவாதாக தகவல் வெளியானது. கோரிக்கைகள் அளவுக்கு அதிகமாக குவிந்துள்ள காரணத்தால் புதிய அலுவலகத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட வாய்ப்புகள் உள்ளது.
பெங்களூர், நொய்டா, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை காட்டிலும் கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் செலவில் இருந்து ஊழியர்கள் சம்பளம் வரையில் குறைவான செலவுகள் மட்டுமே நிர்வாகத்திற்கு ஆகும். இதனால் இன்போசிஸ் தனது 2 ஆம் மற்றும் 3 ஆம் தர நகரங்களுக்கான அலுலக விரிவாக்கம் தொடர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.