திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழித்தடத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த ரயில்கள் எல்லாம் போகாது

post-img
திருச்சி: மதுரை - திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும். சில ரயில்கள் திருச்சி வழியாக செல்லாமல் திண்டுக்கல் மற்றும் கரூர் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை ரயில்வே கோட்டத்தின் திருச்சி மற்றும் திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி செங்கோட்டை - மயிலாடுதுறை (வண்டி எண்: 16848) நாளை (வியாழக்கிழமை), 14, 17, 28, 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 4, 7, 9, 11-ந்தேதியும் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும். நாகர்கோவில் - சிவாஜி மஹடி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16352-) நாளை (வியாழக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 9-ந்தேதியும், குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), இன்று (புதன்கிழமை), 13, 16, 27, 30-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 3, 6, 8, 10-ந்தேதியும், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும். கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12666), வருகிற 14, 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும். இதேபோல், நாகர்கோவில் - கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16354) வருகிற 14, 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சி வழியாக செல்லாமல் திண்டுக்கல் மற்றும் கரூர் வழியாக செல்லும். மேலும் மயிலாடுதுறை - செங்கோட்டை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16847) வருகிற 14-ந்தேதி அடுத்த மாதம் 9, 11-ந்தேதியும், கச்சகுடா - நாகர்கோவில் சிறப்பு ரயில் வருகிற 13-ந்தேதியும் அடுத்த மாதம் 10-ந்தேதியும், சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16127) வருகிற 14-ந்தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாமல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்" இவ்வாறு திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Post