பொறியியல் அதிசயம்! உலகம் வியக்கும் செனாப் ரயில் பாலம்.. 20 வருட வெயிட்டிங் ஓவர்? என்னென்ன சிறப்புகள்

post-img
ஜம்மு: ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவுக்கு நிலநடுக்கம் வந்தாலும் தாங்கி நிற்க கூடிய அளவு வலிமை கொண்டதாக கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும். பாலத்தின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். உலகிலேயே உயரமான பாலமாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் கட்டமைப்பு பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பொறியியல் அதியசமாக கருதப்படும் இந்த செனாப் ரயில் பாலம் கட்டமைப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. தற்போது காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு - உத்தம்பூர் - கட்ரா - ஸ்ரீநகர் - காசிகுண்டு - பாராமுல்லா இடையே மொத்தம் உள்ள 345 கி.மீ. தொலைவில் 328 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. ரியாசி - கட்ரா இடையே மட்டும் 17 கி.மீ. தூரத்துக்கு இமயமலையை உடைத்து ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஒருசில இடங்களில் மட்டும் பணிகள் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளன. அந்தப் பணிகளும் ஜனவரி மாதத்தில் முடிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பணிகள் எல்லாம் ரூ.43 ஆயிரத்து 12 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு காஷ்மீர் மக்களுக்கு தங்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற சாதனையை படைத்துள்ள செனாப் பாலம் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் ஆற்று மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. அதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் கூடுதல் உயரமாகும். இந்த பாலத்தில் ஜனவரி 23 ஆம் தேதி ரயிலை ஓட்டி பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய இருக்கிறார். 30 ஆண்டு கால திட்டமான ஜம்மு - உத்தம்பூர் - கட்ரா - ஸ்ரீநகர் - காசிகுண்டு - பாராமுல்லா இடையேயான புதிய ரயில் திட்டம் விரைவில் நனவாக இருக்கிறது. அடுத்த மாதம், செனாப் மேம்பாலத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிபார்க்கப்படுகிறது. அத்துடன் ஜம்மு முதல் பாராமுல்லா வரை 345 கி.மீ. தூரத்துக்கு தங்கு தடையில்லாமல் ரயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் இனி கன்னியாகுமரி முதல் ஜம்மு, ஸ்ரீநகர் வழியாக பாராமுல்லா வரை ரயில்களை இயக்க முடியும். இதனால் ஜம்மு காஷ்மீரும் பொருளாதார வளர்ச்சியை எட்டும். * கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்திலும், செனாப் நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்திலும் உள்ளது. உலகத்திலேயே மிகவும் உயரமான ரயில்வே மேம்பாலம் இதுதான். * 'டெக்லா' என்ற தொழில் நுட்பத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம்,1,315 மீட்டர் ஆகும். * 28,660 டன் எடையிலான இரும்பும், 46 ஆயிரம் கன மீட்டர் அளவிலான கான்கிரீட்டும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும். * மைனல் 10 டிகிரி செல்சியஸ் குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. * 8 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கத்தையும் தாங்க கூடியது. * மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் கடந்து போக செய்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்.இந்த பாலத்தின் ஆயுட்காலமும் 120 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Post