புதுக்கோட்டை மாவட்ட வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் காணப்பட்டது. அதாவது தக்காளி ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய், இஞ்சி 400 ரூபாய், என்ற விலைகளில் வார சந்தைகளில் விற்கப்பட்டு வந்தது. வரத்து குறைவினால் தொடர்ந்து விலை ஏற்றத்தில் காய்கறிகள் விற்கப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விலை சற்று குறைந்து வருகிறது.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட வார சந்தைகளிலும் காய்கறிகளின் விலை அதாவது தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை குறைந்து வந்தாலும் இஞ்சியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
விலை நிலவரம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வாரசந்தை விலை பொறுத்தவரை, தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 50 ரூபாய்க்கும் ,பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும் , இஞ்சி 400 ரூபாய்க்கும், கொத்தமல்லி கட்டு 15 ரூபாய்க்கும், புதினா கட்டு ஒன்று 30 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் 40 ரூபாய்க்கும், முட்டை கோஸ் 40 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறிகளின் விலை நிலவரம் குறைந்துள்ள நேரத்தில் தொடர் விலை உயர்வில் இஞ்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது , எனினும் மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் தற்போது காய்கறிகள் வாங்குவதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது அனைத்து காய்கறிகளையும் குறைந்த விலைக்கு வாங்கி செல்ல முடிகிறது என்று இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து வியாபாரிகள் பேசியபோது, “தற்போது அனைத்து காய்கறிகளும் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இன்னும் போக போக விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் இந்த மாதம் சுப முகூர்த்தம் நிறைந்த மாதமாக உள்ளதால் விசேஷ நாட்களில் மட்டுமே விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தனர்.