சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். போருரில் உள்ள கெப்பல் நிறுவனத்தில் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். காலை 7 மணி முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒன் பாராமவுண்ட் ஐடி வளாகத்தை ரூ2,100 கோடிக்கு வாங்கிய நிலையில் கெப்பல் நிறுவனத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை போரூர் மற்றும் கங்குவான்சாவடி பகுதிகளில் இன்று காலையில் இருந்தே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணி முதல் இந்த பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை போரூர் அருகே உள்ள கெப்பல் என்ற தனியார் ஐடி நிறுவனத்தில் இந்த சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதம் தான் இந்த கெப்பல் நிறுவனம் இங்கு திறக்கப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரை சேர்ந்த இந்த நிறுவனமானது உலகம் முழுக்க 30 க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையினை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதேபோல் சென்னை கங்குவான்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். எதற்காக இந்த சோதனை என்பதும், ஏதும் ஆவணங்கள் சிக்கியதா என்பதும் சோதனைக்கு பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.