வேலூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியை அம்ரிஷாவுக்கு என்ன ஆனது.. கடைசி வரை திறக்கப்படாத கதவு

post-img
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி, நாவிதம்பட்டி கிராமத்தை சேர்ந்த தனியார் மகளிர் கல்லூரியில் பேராசிரியை அம்ரிஷா என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். இந்த சூழலில் பேராசிரியை அம்ரிஷா அடிக்கடி வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் வீட்டிலுள்ள அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, வெளியே வரவே இல்லை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி, நாவிதம்பட்டி கிராமத்தை சேர்ந்த டில்லி என்பவருடைய மகள் அஷ்மிதா என்கிற அம்ரிஷா (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அம்ரிஷா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த சூழலில் அஷ்மிதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் வயிற்று வலி அதிகமானதாக கூறப்படுகிறது. உடனே வீட்டிலுள்ள அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட அம்ரிஷா, நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவே இல்லை.. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் கதவை அம்ரிஷா திறக்கவில்லையாயாம். இதனையடுத்து கதவை திறக்காததால் கதவை உடைத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளே சென்றனர். அப்போது அஷ்மிதா மின் விசிறியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அம்ரிஷாit உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கல்லூரி பேராசிரியை அம்ரிஷா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் அவரது தாய் மணிமாலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பேராசிரியை அம்ரிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக மேல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரைவிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) வேலூர் காட்பாடி சாலையில் மாநகராட்சி கழிவுநீர் வாகனத்தில் சிக்கி பெண் பொறியாளர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த பெரியபாலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருடைய மகள் அஸ்வினி (வயது 28). என்ஜினியரான இவர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக அவரது சகோதரர் பிரபாகரனுடன் இருசக்கர வாகனத்தில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே வேலூர்-காட்பாடி சாலையில் சென்று கொண்டு இருந்தார். காட்பாடி சாலையில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. சாலை நெடுகிலும் மண் கொட்டப்பட்டு இருந்தது. பிரபாகரன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் அங்கு கொட்டப்பட்டுள்ள மண்ணில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறிய பிரபாகரன் மோட்டார்சைக்கிளில் இருந்து இடது புறமும், பின்னால் அமர்ந்திருந்த அஸ்வினி வலது புறத்திலும் கீழே விழுந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த மாநகராட்சி கழிவுநீர்வாகனம் அஸ்வினியின் மீது ஏறி இறங்கியது. இதில் அஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மாநகராட்சி வாகன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Post