காவேரி மருத்துவமனையில் லொள்ளு சபா சேஷு..

post-img

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சிகிச்சைக்கு பண உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற ஒரு நிகழ்ச்சி பிரபலமடைந்தது. இதில் சந்தானம், ஜீவா, மனோகர், சேஷு, மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி 2004 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டு வந்தது.

பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை காமெடியாக மாற்றி லொள்ளு சபாவில் கலாய்த்திருப்பார்கள். அதில் காந்திமதி நடித்த ஓச்சாயி கிழவி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சேஷு. இதன் மூலமும் அவர் பிரபலமானார்.

இதன் மூலமாகத்தான் மேற்கண்ட நடிகர்களும் நடிகையும் சினிமாவுக்கு வந்தனர். அந்த வகையில்தான் சேஷுவும் லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோருடன் நடித்திருந்தார்.

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சேஷு அறிமுகமானார், பின்னர் வீராப்பு, பாரிஸ் ஜெயராஜ், பெஸ்டி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சரக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி எந்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜ்ய சபா மட்டுமல்ல.. மத்திய அமைச்சராக பிளான் போட்ட கமல்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. அடிதூள்!

அவருடைய சிகிச்சைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் செலவாகிறதாம். இதனால் சேஷுவின் உயிரை காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கு உதவ நினைப்பவர்கள்:

கோட்டாக் மகிந்திரா வங்கி

வங்கிக் கணக்கு எண் 9412025212

ஐஎப்எஸ்சி கோடு: KKBK0000431

சேமிப்பு கணக்கு

பெயர் : எல் பாரத்

என்ற வங்கிக் கணக்கு எண்ணிற்கு பணம் போடலாம்.

பின்குறிப்பு: மேற்கண்ட வங்கிக் கணக்கிற்கு பணம் போட வேண்டும் என நினைத்து உதவுபவர்களுக்கு பாராட்டுகள். அதே நேரத்தில் இந்த வங்கிக் கணக்கு எண் மூலம் போடப்படும் பணம் சேஷுவின் சிகிச்சைக்கு போய் சேருகிறதா என்பதை தனிநபர்கள் மருத்துவமனைக்கு போன் மூலமாகவோ நேரிலோ சென்று விசாரித்து அது உண்மை என்ற பட்சத்தில் பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

 

Related Post