சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்விற்கு பின் முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். ஒரு தொடருக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தவுடன், செய்தியாளர்களிடம் பேசுவதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் வந்தபோது, 38 வயதான அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். டெஸ்ட் போட்டிகளில் நாட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.. 38 வயதான அஸ்வின், பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலேயே அஸ்வின் சேருவதற்கு முன் அஸ்வின் இது தொடர்பாக கண்டிஷன் வைத்ததாக கூறப்படுகிறது.
அதாவது SENA நாடுகளில் இந்தியா பெரிதாக ஸ்பின் பவுலர்களை பயன்படுத்துவது இல்லை. மாறாக பாஸ்ட் பவுலர்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தன்னை முதல் ஸ்பின் ஆப்ஷனாக பயன்படுத்தினால் மட்டுமே அணியில் இணைவேன் என்று அஸ்வின் சில ஆலோசனைகளை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவரை அணியில் எடுத்த ரோஹித் - கம்பீர் படை அவருக்கு அணியில் இடம் தரவில்லை. அதோடு இல்லாமல் வாஷிங்க்டன் சுந்தரை முதல் ஸ்பின் சாய்சாக எடுத்தனர். இதுதான் அஸ்வினின் ஈகோவை சீண்டியதாக கூறப்படுகிறது.
தான் அணிக்கு தேவை இல்லை என்றால் ஏன் தேவையில்லாமல் பென்ச் தேய்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. எமோஷனுக்கு இடம் தராமல்.. யாருடனும் சண்டை போடாமல்.. சில முன்னாள் வீரர்கள் தோனியை திட்டுவது போல இவர் யாரையும் திட்டி போஸ்ட் செய்யாமல் டீசண்ட்டாக நான் ஓய்வு பெறுகிறேன் என்று அஸ்வின் அறிவித்துவிட்டார்.
அஸ்வின் சாதனை: இந்தியாவுக்காக 13 ஆண்டுகாலமாக கிரிக்கெட் ஆடிய நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். 537 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் டாப் ஸ்பின் பவுலர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார். அனில் கும்ப்ளேவின் 619 ரன்களுக்கு அடுத்தபடியாக அஸ்வின் உள்ளார்.
கடந்த சில வருடங்களாக நல்ல பார்மில் இருந்து தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்த அஸ்வினின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. மார்ச் 2022 இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் (போட்டிகளின் அடிப்படையில்) 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வேகமாக எட்டியவர் அஸ்வின். 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை (போட்டிகளின் அடிப்படையில்) எட்டிய அதிவேக இந்தியர். ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து விக்கெட்டுகளை நான்கு முறை எடுத்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 50 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். டெஸ்ட்களில் அதிக நாயகன் விருதுகள் (11) பெற்றவர் அஸ்வின் என்பதும் குறிப்பிடத்தக்கது.