நிலவின் தென் துருவ பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை சந்திரயான் 1 கண்டுபிடித்த பின்னர் நிலவை ஆக்கிரமிப்பதற்கான போட்டி உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவும் சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவத்தை ஆராய திட்டமிட்டது. ஆனால் இதன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்காமல் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் சந்திராயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருக்கிறது.

நிலவின் தென்துருவத்தில் இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்குகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.