டெல்லி: நமது நாட்டில் இப்போது இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகளின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த செயலிகள் நமது நாட்டின் படுக்கையைக் கூட மெல்ல மாற்றத் தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது முன்பு பாலியல் சார்ந்த பொருட்களை ஆர்டர் செய்யப் பலரும் தயங்கிய நிலையில், இந்த டெலிவரி செயலிகளால் அவர்கள் தைரியமாக அவற்றை வாங்குகிறார்களாம்.
நமது நாட்டில் செக்ஸுவல் ஹெல்த் எனப்படும் பாலியல் சார்ந்த உரையாடல்கள் என்பது இதுவரை தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இதனால் பலருக்கும் இது தொடர்பான தெளிவான புரிதல் இருப்பதில்லை.
அதிகரிப்பு: அதேபோல ஆணுறை மற்றும் செக்ஸ் டாய்ஸ் எனப்படும் பாலியல் பொம்மைகளை வாங்குவதிலும் மிகப் பெரிய தயக்கம் இருந்தது. பலருக்கு இந்தியாவில் இவை கிடைக்கும் என்பது கூட தெரியாத நிலையே இருந்தது. ஆனால், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வந்த பிறகு இந்த நிலை மாற தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்விக்கி, ஜெப்டோ, பிளிங்க்இட் போன்ற இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் வந்த பிறகு இதன் விற்பனை அதிகரித்தே இருக்கிறது.
சமீபத்தில் ஸ்விக்கி வெளியிட்ட டேட்டாவில் கூட நள்ளிரவு நேரங்களில் செக்ஸுவல் வெல்னஸ் எனப்படும் பாலியல் சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டெலிவரி செயலிகள் மூலம் ஆணுறை மட்டுமின்றி அனைத்து வகையான செக்ஸுவல் வெல்னஸ் தயாரிப்புகளும் அதிகளவில் விற்பனையாகிறதாம். நமது நாட்டில் மக்களிடையே, அதிலும் குறிப்பாக இளைஞர்களிடையே,செக்ஸுவல் வெல்னஸ் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று இல்லை என்ற மனநிலை ஏற்பட்டு வருவதையே இது காட்டுகிறது.
டையர் 3 நகரங்கள்: இதுபோன்ற விற்பனை அதிகபட்சம் ஓரிரு மெட்ரோ சிட்டிகளில் மட்டுமே இருக்கும் என நாம் நினைப்போம். ஆனால், உண்மை அது இல்லை. மெட்ரோ சிட்டிகள் மட்டுமின்றி டையர் 2, டையர் 3 சிட்டிகளிலும் கூட இப்போது இதுபோன்ற பாயில் சார்ந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறதாம். மொத்த ஆர்டர்களில் சுமார் 20% டையர் 3 நகரங்களில் இருந்து மட்டுமே வருகிறதாம். பல நேரங்களில் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு ஆர்டர்கள் குவிவதாகவும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும், இதுபோன்ற பாலியல் சார்ந்த பொருட்களை மக்கள் பெரும்பாலும் இன்ஸ்டன்ட் டெலிவரி செயலிகள் மூலமாகவே ஆர்டர் செய்ய விரும்புவதும் தெரிய வந்துள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலில் நீங்கள் கடை அல்லது மருந்தகத்திற்குச் சென்று வாங்கும் போது, அது தேவையில்லாத கவனத்தை உங்கள் மீது திருப்பும். பலரும் கடைகளுக்குச் சென்று இவற்றை வாங்கத் தயங்க இதுவே முக்கிய காரணமாகும்.
என்ன காரணம்: இது மட்டுமின்றி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது நாம் என்ன பொருட்களை ஆர்டர் செய்கிறோம் என்பது வெளியே தெரியாத வகையில் சீக்ரெட் பேக்கிங் உடன் தான் வரும் என்பது ஒரு காரணம். அதேபோல ஆர்டர் செய்தால் சில நிமிடங்களில் வீடு தேடி இவை வந்துவிடும் என்பதும் இன்ஸ்டன்ட் டெலிவரி மூலம் ஆர்டர் செய்ய மற்றொரு காரணமாகும்.
அதேபோல இந்த டெலிவரி நிறுவனங்களும் ஒரு யுக்தியைக் கடைப்பிடிக்கின்றன. அதாவது இதுபோன்ற பொருட்கள் இருக்கும் செக்ஷனை பாலியல் சார்ந்த பொருட்கள் என்று குறிப்பிடாமல் வேறு வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள். அதாவது முக சாதன பொருட்களைப் போல இதுவும் சாதாரண ஒரு செக்ஷன் தான் என்பதை நமது மனதில் எடுத்து வர முயல்கிறார்கள்.,
Weather Data Source: Wettervorhersage 21 tage