2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்த ஐசிசி அனுமதித்துள்ளது. அதேபோல் 2027 ஆம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நடத்தும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இரு நாடுகளும் தங்களுக்கான போட்டிகளை பொதுவான இடத்தில் விளையாட ஐசிசி அனுமதித்துள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
அதேபோல், 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும், 2025 சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொண்ட பாகிஸ்தானுக்கு இழப்பீடாக 2028 ஆம் ஆண்டு ஆடவர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை ஐசிசி வழங்கி உள்ளது.