புத்தாண்டு பலன் 2025: 2025 புத்தாண்டை பலரும் பல காரணங்களுக்காக எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அதில் திருமணத்துக்காக காத்திருப்போர் அதிகம். முக்கிய 90ஸ் கிட்ஸ்களின் திருமண ஆசை இந்தாண்டாவது நிறைவேறுமா என்று பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 2025 ஆம் ஆண்டில் திருமணம் யோகம் உள்ள ஐந்து ராசிகளை இங்கே காணலாம். (lucky zodiac)
களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் தான் திருமணத்துக்கு அதிபதி. ஏழாம் இடம் என்பது திருமணம் மட்டுமல்லாமல் நட்பு, காதல், உறவுமுறை ஆகியவற்றுக்கும் பொருந்தும். ஏழாம் இடத்துக்கு விரய ஸ்தானமான ஆறாம் இடத்தில் குரு பார்வை உள்ள நபர்களுக்கு எல்லாம் நல்ல திருமண வாழ்க்கை நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. (five zodiac signs with marriage yoga)
திருமணம் யோகம் பற்றிய பல்வேறு தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. சனி பார்வை இருந்தால் நல்லதா, குரு பார்வை முக்கியமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அது அந்தந்த ஜாதகத்தை பொறுத்து மாறுதலுக்குட்பட்டது. அதனால் பொது பார்வையுடன் உங்கள் ஜாதகத்தையும் ஒருமுறை பார்த்துக் கொள்வது நல்லது. (2025 இல் திருமணம் நடக்கும் ராசிகள்)
ரிஷபம் (new year rasi palan for rishabam): ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் ஏழாம் இடத்தைப் பார்க்கவுள்ளார். 2025 மார்ச் மாதம் வரை ஏழாம் இடத்தை சனி பகவான் பார்ப்பார். அதனால் இத்தனை நாள் திருமணம் தாமதம் நிலவும். செவ்வாயின் வீட்டில் சனி இருப்பதால் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படும். மார்ச் மாதத்துக்குப் பிறகு சனி ஏழாம் இடத்தில் இருந்து விலகவுள்ளார். அதனால் திருமணம் யோகம் கூடும். காதல் வயப்படுவது, நல்ல நண்பர்கள் சூழ்வது நிச்சயம் நடைபெறும்.
மே மாதத்துக்குப் பிறகு சுப செலவுகள் நிச்சயம் உருவாகும். அக்டோபர் மாதத்துக்குள் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. 2025 ஆம் ஆண்டிலேயே குழந்தை பாக்கியம் உண்டாவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
மிதுனம் (new year rasi palan for midhunam): மிதுனம் ராசியை பொறுத்தவரை 2025 ஜனவரி மாதத்தில் இருந்தே நேரம் நன்றாக இருக்கிறது. ஆனால் குரு வக்கிர கதியில் இருக்கிறார். வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி வரை இதே நிலை தொடரும். அதன் பிறகு திருமணம் வாய்ப்பு உருவாகும். பிப்ரவரி மாதத்துக்கு பிறகே திருமணம் குறித்து குறுகிய காலத்துக்குள் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் ஏற்படும். மே மாதத்திலேயே கூட திருமணம் நடைபெறுமளவுக்கு யோகம் உள்ளது.
கடகம் (new year rasi palan for kadagam): கடகம் ராசிக்கு மார்ச் மாதத்துடன் அஷ்டம சனி முடிவடைகிறது. மே மாதம் குரு பகவான் விரய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பகவான் பெயர்ச்சி ஆனவுடனே நல்ல வேலையுடன், திருமணம் வாய்ப்பும் கைக்கூடும். புதிய உறவுகளால் நன்மை உண்டாகும்.
துலாம் (new year rasi palan for thulam): துலாம் ராசிக்கு மே மாதம் வரை விரய ஸ்தானத்தில் குரு பார்வை உள்ளது. 2025 ஆம் ஆண்டிலேயே குரு பகவான் மே - அக்டோபர் ஒன்பதாம் இடத்திலும், அக்டோபர் - டிசம்பர் பத்தாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளார். திருமணம் யோகம், வீடு மனை வாய்ப்பு உருவாகும்.
மகரம் (new year rasi palan for magaram): மகரம் ராசிக்க ஏழரை சனி பாதிப்பு விலகி நிம்மதி பிறக்கப் போகிறது. ஏழாம் இடத்துக்கு குரு பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி, குரு ஆகிய இரண்டு முக்கிய கிரகங்களும் ஜனவரி - அக்டோபர் பல நன்மைகளை செய்வார்கள். நல்ல வருவாயுடன் சேர்ந்து திருமண யோகம் கைக்கூடும். இதுதவிர ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், மகரம் லக்னத்தைக் கொண்ட ராசிகளுக்கும் திருமணம் வாய்ப்பு உள்ளது.