மதுரை: முக்குலத்தோர் சமுதாயத்தினரை அதிமுக புறக்கணிப்பதாக சொல்றாங்களே உண்மையா என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மூக்கையா தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், தனியாக பேசிக்கலாம் தம்பி, என்னைத் தான் எப்ப வேண்டாலும் பார்க்கலாமே எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதில் இருந்து நழுவிக்கொண்டார்.
முக்குலத்தோர் சமுதாயம் குறித்த கேள்வியே வேண்டாம் என்று தவிர்த்த திண்டுக்கல் சீனிவாசன் நோ கமெண்ட்ஸ் என்று கூறி அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்.
இதன் மூலம் முக்குலத்தோர் சமுதாயத்தினரை எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை திண்டுக்கல் சீனிவாசன் ஒத்துக்கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோல் இல்லை என்றால், தன்னிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, குறைந்தபட்சம் அப்படியெல்லாம் இல்லை என்று பதில் சொல்லியிருக்கலாம்.
பெரிய அவமானமாகிடுங்க! லாபி செய்த ஓபிஎஸ்.. மதுரை மாநாட்டை புறக்கணிக்கும் முக்குலத்தோர்? எடப்பாடி ஷாக்
ஆனால் அது போல் செய்யாமல் பதற்றப்பட்டு நோ கமெண்ட்ஸ் எனக் கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். இதனிடையே பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டால் அதனை அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் பாரதத்தை ஆதரிக்கிறோம் என்று கூறினார். இது எவ்வளவு பெரிய விவகாரம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட இது குறித்து இன்னும் முழுமையாக பேசவில்லை.
இந்தியா பெயர் விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டிய முடிவை போகிற போக்கில் செய்தியாளர்களிடம் ரொம்ப ஈஸியாக கூறிவிட்டு புறப்பட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
Weather Data Source: Wettervorhersage 21 tage