தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் 5,445 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,560 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.