பல்லை துலக்கியதும் வெறும் வயிற்றில் "இந்த" தண்ணீரை குடிங்க..

post-img

சென்னை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க அற்புதமான பானம் இருக்கிறது. இது பல வியாதிகளை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் தற்போது வாழ்வியல் முறையில் மாற்றங்களால் நோய் நொடி இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்காக மருத்துவமனைககு சென்று கலர் கலராக மருந்து சாப்பிடும் நிலை உள்ளது.


அதே வேளையில் இயற்கையான பொருட்களை வைத்து பல்வேறு நோய்களை தீர்க்கும் மகத்துவம் கொண்ட விஷயங்களை முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். அதை நாம் பின்பற்றினாலே பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம்.


அந்த வகையில் பார்லி குறித்து பார்க்கலாம். பார்லி என்பது அரிசி போல் இருக்கும். அதைவிட சிறியதாக இருக்கும். இந்த அரிசி மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இந்த அரிசி விளையும். இந்த பார்லி பிரட், சூப், ஸ்டியூ உள்ளிட்ட உணவு பொருட்களில் சேர்ப்பார்கள். பார்லியை மற்ற வடிவங்களை காட்டிலும் அதன் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.


அதுதான் அதிக பலன்களை கொடுக்கும். கிரேக்கர்கள் தண்ணீர், பார்லி கலந்த ஒரு பானத்தை அருந்துவார்கள். அதன் பெயர் கைகியான். இந்த பார்லி தண்ணீர் பஞ்சாப்பில் மிகவும் பிரபலம். இந்த பார்லி உடலில் உள்ள நச்சுகளை அகற்றி உடலுக்கு வளர்சிதை மாற்றததை மேம்படுத்துகிறது. ஒரு கப் பார்லியை கழுவி எடுத்து கொண்டு அதில் 7 முதல் 8 கப்புகள் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.


வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க.. நீரிழிவு நோயாளிகளே இதை நோட் பண்ணுங்க.. வெள்ளை பூக்களின் மகத்துவம்
பிறகு அது வெந்தவுடன் தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பார்லியில் விட்டமின் பி, மாங்கனீஸ், செலினீயம்,பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்கள் உள்ளன. நார்ச்சத்து நிறைய இருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.


கேன்சர் உள்ளிட்ட இணை நோய்களிலிருந்து தடுக்க பைட்டோகெமிக்கல்கள் பார்லியில் உள்ளது. பார்லி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது ஜீரணத்தை தூண்டுகிறது. மெதுவாக ஜீரணமாவதால் உங்கள் வயிறு நிறைந்த மாதிரியே இருக்கும். பார்லியில் கலோரிகளும், லேசான கொழுப்பும் உள்ளன. சிறுநீர் பாதைகளில் உள்ள தொற்றுகளை நீக்கும் மேஜிக்கல் மருந்து இந்த பார்லி தண்ணீர்.


சிறுநீரை பெருக்கும் திறன் கொண்டது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். கிட்னி கற்கள் மற்றும் நீர் கட்டிகளுக்கு சிறந்த தீர்வாக இந்த பார்லி தண்ணீர் அமையும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். கிரியாட்டினைன் அதிகம் இருந்தால் அதை சீராக்கும் தன்மை கொண்டது.


வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. மலச்சிக்கலை போக்கும். இதய நோய்களை தடுக்கும். உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். இது ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும். இந்த பார்லி தண்ணீர் சிறுகுடில் பிரிவோடெல்லா எனும் பாக்டீரியாவை வளர வைக்கிறது. இதுதான் 11 முதல் 14 மணி நேரம் வரை சர்க்கரை அளவு குறைந்திருக்கும். பார்லியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும்.


கொலஸ்டிராலை குறைக்க உதவுகிறது. தோலுக்கு நன்மை செய்கிறது. முகம் பொலிவடைகிறது. இந்த பார்லியில் அசிலைக் என்ற ஒரு பொருள் இருக்கிறது. இதனால் முகப்பருக்கள் நீங்குகின்றன. வயோதிகத்தை தடுக்கும். ரத்த அழுத்தத்தையும் இந்த பார்லி குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்கும். இதனால் இதய நோய் ஏற்படுவது கணிசமாக குறைகிறது.


கர்ப்பிணிகள் இதை குடிப்பது நல்லது. கர்ப்பிணிகளுக்கு ஜீரணத்தை அதிகரித்து மலச்சிக்கலை குறைக்கும். காலையில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வுகளை நீக்கும்.

 

 

Related Post