ஸ்க்ரீனில் தோன்றிய 3 சிவப்பு.. அப்படியே மாறிய ரோஹித் முகம்.. இந்தியா - வங்கதேசம்?

post-img

சென்னை: இந்தியா வங்கதேசம் மேட்சில் நடந்த சம்பவம் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்த தொடரில் இந்தியா அடுத்தடுத்து 3 போட்டிகளில் வென்றுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா என்று வரிசையாக இந்தியா வென்றுள்ளது. இன்று வங்கதேசம் இந்தியா மேட்ச் நடக்கிறது. இதில் வெங்கடெஸ்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் நிதானமாக ஆடிக்கொண்டு இருக்கிறது. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக நிதானமாக வங்கதேசம் அணி ஆடிக்கொண்டு இருக்கிறது.


இந்திய அணி: இன்று ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்றும் அணியில் அஸ்வின் எடுக்கப்படவில்லை. வங்கதேச அணியில், லிட்டன் தாஸ், டான்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேட்ச்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


என்ன நடந்தது?: இந்த மேட்சில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பிட்ச் ஸ்விங் ஆவதற்கு சாதகமாக உள்ளது. மேட்ச் புனேவில் நடக்கிறது. அங்கே நன்றாக காற்று வீசுகிறது. பிட்ச் ஸ்லோவாக உள்ளது. இதனால் பந்து லேட் ஸ்விங் ஆகிறது. லேட்டாக பந்து ஸ்விங் ஆவதால் பேட்ஸ்மேன்கள் திணற தொடங்கி உள்ளார்.

 

முக்கியமாக பும்ரா திடீரென அதிக அளவிற்கு லேட் ஸ்விங் போட்டு வருகிறார். இதனால் வங்கதேச வீரர்கள் பந்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் 5வது ஓவரின் கடைசி பந்தில் பும்ரா வீசிய பந்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.


பும்ரா வீசிய அந்த பந்தை தன்சித் ஹாசன் எதிர்கொண்டார். அந்த பந்தை 137.1 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.. அந்த பந்து பேட்டில் பட்டது போல இருந்தது. இதனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. அதேபோல் ரோஹித் சர்மாவும் ரிவ்யூ எடுக்கவில்லை. அதன்பின் ஓவர் முடிந்து அடுத்த ஓவர் தொடங்கியது.


சுவாரசிய சம்பவம்: அப்போதுதான் அந்த பந்து ரிப்ளே செய்யப்பட்டது. அதில்தான் பந்து பேட்டில் படவில்லை முட்டியில் பட்டது தெரிந்தது . அதோடு பந்து சரியாக லைனில் பட்டு.. சரியாக ஸ்டம்பில் விழுந்துள்ளது. இதனால் ரிப்ளேவில்../ பேட்.. லைன்.. விக்கெட் ஹிட்டிங் என்ற மூன்று புள்ளிகளும் சிவப்பாக காட்டப்பட்டது. மூன்றும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டது.
அதை பார்த்ததும் ரோஹித் சர்மா அதிர்ச்சி அடைந்தார். ரோஹித் சர்மா அப்போது ரிவ்யூ எடுத்து இருந்தால் அதில் விக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கும். ரோஹித் சர்மா முகம் இதனால் சிவந்து போனது. இதில் ரீவ்யூ எடுத்து இருந்தால்.. அழகாக விக்கெட் விழுந்து இருக்கும் . இந்தநிலையில் 256-8 ரன்கள் வங்கதேசம் எடுத்துள்ளது.

 

Related Post